சென்னை அண்ணாசாலையில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி! அதிர்ச்சி பின்னணி!

தனக்கு வேலை ஒதுக்கப்படாததால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் […]
கோடநாடு விவகாரம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் பேச்சுப்பொருளாக மாறிய சனாதன ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பல்வேறு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விமர்சனம் தெரிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘மக்கள் பிரச்சினையை திருப்பவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியுள்ளார்’’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலடியாக கடந்த 7ம் […]
சாலையில் சர்வசாதாரணமாக நடமாடும் கரடி! திருப்பதியில் தொடரும் அச்சம்!

திருப்பதி நடைபாதையில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து தற்போது கரடியும் சர்வ சாதாரணமாக வலம் வருவதால் பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சிறுவன் சிறுத்தையால் தாக்கப்பட்டு வனப்பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டான். அதைத்தொடர்ந்து 6 வயது சிறுமி சிறுத்தையால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த தொடர் சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் அலிபிரி நடைபாதையில் கரடி ஒன்று 7-வது மைலில் […]
ராமோஜி பிலிம்சிட்டியில் உலகக்கோப்பை டிராபி! கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

ஐதராபாத்தில் உள்ள ராமேஜி பிலிம்சிட்டியில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. […]
ஆட்டோ டிரைவர் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி டெபாசிட்! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் ஆட்டோ ஓட்டுனரின் வங்கிக் கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரது வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.9,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வரவு வைத்துள்ளது. இது குறித்து அறிந்த சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தாங்கள் தவறுதலாக வரவு வைத்துவிட்டோம் என்று ஆட்டோ டிரைவரை அணுகி வழக்கறிஞர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. […]
குடியரசுத் தலைவரை விட்டுவிட்டு நடிகைக்கு அழைப்பு ஏன்? அமைச்சர் உதயநிதி கேள்வி!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நடிகைகள் அழைக்கப்பட்ட நிலையில் ஏன் ஜனாதிபதியை மட்டும் அழைக்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதைப் பற்றி பேசினாலும் அது டிரெண்டிங்காகிவிடுகிறது. எந்த அச்சமும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் முன்வைக்கும் கருத்துக்களும், குற்றச்சாட்டுகளும் இந்தியா முழுவதும் பேச்சுப் பொருளாக மாறி வருகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]
கனடாவில் இந்தியர்களுக்கு அச்சறுத்தல்! மேலும் ஒரு காலிஸ்தான் திவிரவாதி சுட்டுக்கொலை!

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று கனடா நாட்டில் குடியேறிய காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இக்கொலயில் இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான தூதரக அதிகாரியையும் கனடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு […]
ஜெயலலிதா வலிமையான தலைவர்! புகழ்ந்து பேசிய கனிமொழி எம்.பி.!

மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசிய கனிமொழி எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவை புகழ்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்ட பெருமையை பெற்ற மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா குறித்து தி.மு.க. எம்.பி.கனிமொழி பேசும்போது, ‘‘இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம். ஆதரிக்கிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக பா.ஜ.க. இதனை அரசியலாக்குகிறது என்று தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 1996ம் […]
ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி! ரூ.25 கோடி வென்ற தமிழர்!

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட லாட்டரியில் ரூ.25 கோடி பரிசுத் தொகையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில அரசு, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளின் போது லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரூ.1 கோடி, ரூ.10 கோடி, ரூ.25 கோடி என பம்பர் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு லாட்டரி […]
4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் (செப்.21) மற்றும் நாளையும் (செப்.22) ஆகிய 2 நாட்களில் முதலமைச்சர் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் […]

