News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஜெயிலுக்குள் சவுக்கு சங்கர் கையை உடைச்சிட்டாங்க – வழக்கறிஞர் அதிர்ச்சி குற்றச்சாட்டு

கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருக்கிறது, பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சவுக்கு சங்கரை பைப்பினால் அடித்து துன்புறுத்தி கையை உடைத்திருக்கிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் பேட்டி கொடுத்திருக்கிறார். வழக்கறிஞர் பேசுகையில், ‘’நீதிமன்ற பாதுகாப்பில் இருக்கும் போதே அவருக்குப் பாதுகாப்பு இல்லை. அடுத்து காவல் துறை கஸ்டடிக்குப் போகும் பட்சத்தில் அவருக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? எனவே ஜெயில் சூப்பிரண்டெண்ட் மற்றும் பத்து ஜெயில் வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்திற்குப் போகிறோம். […]

தினம் தினம் மின் வெட்டு… கொதிக்கும் ராமதாஸ்

கோடை காலத்தில் மின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு தினசரி மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 383.52 மில்லியன் யூனிட். இதில் மத்திய கிரிட் ( மின் கட்டமைப்பு ) மூலம் 209.52 மில்லியன் யூனிட், அனல் மின் நிலையத்தால் 94.75, ஹைட்ரோ திட்டத்தில் 7.11, காஸ் 5.55, காற்றாலை 22.26, சூரிய […]

செரினாவை மறந்துட்டு சவுக்குக்கு ஆதரவா..? சசிகலாவுக்கு செம தாக்குதல்

தேவர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாருமே வேலைக்குப் போவதில்லை, வெட்டியாக பொழுதைப் போக்கி கஞ்சா போட்டுக்கொண்டு சில்லறைத்தனம் செய்கிறார்கள் என்று ஒரு வீடியோ போட்டிருந்தார் சவுக்கு சங்கர். எனவே, தேவர் இன மக்கள் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் தி.மு.வுக்கு எதிர்ப்பு காட்டுகிறேன் என்ற எண்ணத்தில் சவுக்கு கைதுக்கு ஒரு ட்வீட் போட்டார். அதில், ’சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக […]

திருப்பூர் ஃபர்ஸ்ட் திருவண்ணாமலை லாஸ்ட். +2 தேர்வு முடிவுகள்

தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம […]

சவுக்கு சங்கர் மீது கஞ்சா உள்ளிட்ட புதுப்புது வழக்குகள். எடப்பாடி பழனிசாமி நோ கமென்ட்ஸ்

காவல் துறை அதிகாரிகள் குறித்தும் பெண் அதிகாரிகள் குறித்தும் அவதூறு பேசியதாக பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. சவுக்கு சங்கர் கைது தொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் பாக்கியம் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, “வழக்கு விசாரணைக்காக கைது செய்ய வந்த கோவை போலீசாருடன் சம்பவ இடத்தில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த […]

அப்பா ரேவண்ணாவை தூக்கிய போலீஸ்… மகன் பிரஜ்வல் கைது எப்போது..?

இந்தியாவை உலுக்கும் வகையில் கர்நாடகத்தின் ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் செக்ஸ் பாலியல் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளன. இதற்கு அவரது தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் ம.ஜ.த. எம்எல்ஏவுமான ரேவண்ணா மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென ரேவண்ணாவி போலீஸ் கைது செய்திருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் ம.ஜ.த.வின் மூத்த தலைவருமான‌ ரேவண்ணா கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் […]

துப்பாக்கி முனையில் ரேவண்ணா செய்த பாலியல் பலாத்காரம்

பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் குற்ற வழக்கில் தினம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இந்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரதமர் மோடி இதுவரையிலும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. பிரஜ்வெல் ரேவன்னா, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகௌடாவின் பேரன் ஆவார். இவர் தற்போது கர்நாடகாவின் ஹசான் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் ஆவாபிரஜ்வெல் பாலியல் ரீதியாக பல பெண்களிடம் அத்துமீறியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் […]

பிரிஜ் பூஷன் மகனுக்கு எதிராக சாக்‌ஷி மாலிக் தேர்தல் பிரசாரம்

இந்தியாவுக்காக மல்யுத்தப் போட்டியில் வென்று பரிசு வாங்கி ஆனந்தக் கண்ணீர் விட்ட சாக்‌ஷி மாலிக், அதன்பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் விளைவாக நாள் தோறும் கண்ணீர் சிந்த வேண்டியதாயிற்று. பல நாட்கள் போராட்டம் நடத்தியும் அவர்களுடைய கோரிக்கை பரிசீலனை செய்யப்படவில்லை. இந்த நிலையில், அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதைக் காட்டும் வகையில் பிரிஜ் பூஷனுக்குப் பதிலாக அவரது மகனுக்குப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாக்‌ஷி மாலிக், “நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை […]

எடப்பாடி பழனிசாமி ஆதரவு காட்டியதால் சவுக்கு கைது..?

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், மு.க.ஸ்டாலின், உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசகராக சவுக்கு சங்கர் செயல்படுவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சவுக்கு டீமை சேர்ந்த கார்த்திக் கோவிந்தராஜனை போலீஸ் கைது செய்தது. இதையடுத்து டீமில் உள்ள மற்றவர்கள் மீது விசாரணையும் தேடுதல் வேட்டையும் நடக்கிறது. கார்த்திக்கை வெளியே எடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்களே […]

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனுக்கு கொம்பு சீவும் பா.ஜ.க.

தேர்தலில் ஒரே ஒரு சீட் கூட கிடைக்காது என்பதில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இப்போதே தெளிவுக்கு வந்துவிட்டார்களாம். அதனால், அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் அதன்பிறகு அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து தி.மு.க.வை எதிர்த்து நிற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த உடன்பாட்டுக்கு இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லையாம். எடப்பாடி பழனிசாமி இப்படியே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தால் அ.தி.மு.க.வில் இருந்து மூத்த தலைவர்களை எல்லாம் இழுத்துவந்து பா.ஜ.க.வில் சேர்ப்பதற்கு […]