News

Follow Us

தேர்தலில் ஒரே ஒரு சீட் கூட கிடைக்காது என்பதில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இப்போதே தெளிவுக்கு வந்துவிட்டார்களாம். அதனால், அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் அதன்பிறகு அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து தி.மு.க.வை எதிர்த்து நிற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த உடன்பாட்டுக்கு இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லையாம்.

எடப்பாடி பழனிசாமி இப்படியே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தால் அ.தி.மு.க.வில் இருந்து மூத்த தலைவர்களை எல்லாம் இழுத்துவந்து பா.ஜ.க.வில் சேர்ப்பதற்கு ஒரு பிளான் நடப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தில் எடப்பாடியுடன் அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் முதல் லிஸ்டில் இருப்பதாகவும், அவரையே தமிழக பா.ஜ.க. தலைவராகப் போட்டால் நிறைய தலைகள் வந்துவிடும் என்றும் திட்டம் போடப்படுகிறதாம்.

இதையெல்லாம் அரசல்புரசலாக கேள்விப்பட்ட செங்கோட்டையன் ஆத்திரத்தின் உச்சிக்கே போயிருக்கிறார். ’நான் கட்சி மாறுவேன் என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறு.. அதுவும் அந்தக் கட்சிக்கு மாறுவேனா.. அதைவிட கேவலமான செயல் வேறு எதுவும் உள்ளதா..’ என்று கொதித்திருக்கிறார்.

தமிழில் தாமரை மலரவே மலராது என்று செங்கோட்டையனே டென்ஷன் ஆகிவிட்டாராம். பா.ஜ.க. நிலை இப்படியா போகணும்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link