News

Follow Us

தேவர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாருமே வேலைக்குப் போவதில்லை, வெட்டியாக பொழுதைப் போக்கி கஞ்சா போட்டுக்கொண்டு சில்லறைத்தனம் செய்கிறார்கள் என்று ஒரு வீடியோ போட்டிருந்தார் சவுக்கு சங்கர். எனவே, தேவர் இன மக்கள் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் தி.மு.வுக்கு எதிர்ப்பு காட்டுகிறேன் என்ற எண்ணத்தில் சவுக்கு கைதுக்கு ஒரு ட்வீட் போட்டார். அதில், ’சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது. தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, தமிழக காவல்துறை நேற்று கைது செய்து போலீஸ் வேன் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்ற போது அவர்கள் வந்த வேன் மீது கார் ஒன்று மோதியதில் சவுக்கு சங்கர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன.

இதன் மூலம் பத்திரிக்கை தொழிலில் உள்ளவர்கள், சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்கள் திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளையும், பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல்களையும், இந்த அரசாங்கத்தின் தவறுகளையும், அஞ்சாமல் தைரியத்துடனும், துணிச்சலாகவும் தனது கருத்துகளை பேட்டிகள் மூலம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் திமுக தலைமையிலான அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை கைது செய்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறது.

தி.மு.ஆ. தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி தங்கள் தவறுகளை மறைக்க பார்க்கிறது. பத்திரிகையாளர்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வேண்டும் என்ற கருத்தை, சமீபத்தில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம், தெரிவித்து இருப்பதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அடியோடு நசுக்கிவிடலாம் என்று தப்பு கணக்கு போடுவதை விட்டுவிட்டு, தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு அவரது ஆதரவாளர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியே இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கும்போது சசிகலா ஆதரவுக்கு வருவது ஏன் என்று கொதிக்கிறார்கள்.

மேலும், ஜெயலலிதா காலத்தில் நடராஜனுடன் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக செரினா மீது கஞ்சா வழக்கு போட்டது மறந்து போச்சா என்று கேட்கிறார்கள்.

ஆழம் தெரியாமல் காலை விட்டாரே சசிகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link