News

Follow Us

பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் குற்ற வழக்கில் தினம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இந்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரதமர் மோடி இதுவரையிலும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை.

பிரஜ்வெல் ரேவன்னா, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகௌடாவின் பேரன் ஆவார். இவர் தற்போது கர்நாடகாவின் ஹசான் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் ஆவாபிரஜ்வெல் பாலியல் ரீதியாக பல பெண்களிடம் அத்துமீறியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 33 வயதான பிரஜ்வெல் ரேவண்ணா பல்வேறு பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் ஆபாச காணொலிகள் சமூக வலைதளங்களில் லீக்காக தொடங்கியது. 

இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹசன் தொகுதியில் கடந்த ஏப். 26ஆம் தேதியே தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலயைில், இவர் தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். 

இந்நிலையில், தற்போது பிரஜ்வெல் மீது மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் பெண் தொண்டர் அளித்த புகாரை தொடர்ந்து சிஐடி பாலியல் வன்புணர்வு வழக்கை பதிவு செய்துள்ளது. அந்த பெண் தனது புகாரில் பிரஜ்வெல் தன்னை எம்.பி., குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், பாலியல் வன்புணர்வு செய்ததை வீடியோ எடுத்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதை வேறு யாரிடமாவது கூறினால், தன்னையும் தன் கணவரையும் கொன்றுவிடுவதாக பிரஜ்வெல் ரேவண்ணா மிரட்டியதாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

சிஐடி காவல்துறையினர் பிரஜ்வெல் ரேவண்ணாவுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, ஆடைகளை அவிழ்த்தல், ஆபாச வீடியோ எடுத்தல் மற்றும் புகார்தாரரை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தல் தொடர்பான பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது இந்தியா அளவில் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link