News

Follow Us

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், மு.க.ஸ்டாலின், உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசகராக சவுக்கு சங்கர் செயல்படுவதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சவுக்கு டீமை சேர்ந்த கார்த்திக் கோவிந்தராஜனை போலீஸ் கைது செய்தது. இதையடுத்து டீமில் உள்ள மற்றவர்கள் மீது விசாரணையும் தேடுதல் வேட்டையும் நடக்கிறது. கார்த்திக்கை வெளியே எடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்களே வேலை பார்த்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சவுக்கு மீடியாவுக்கு ஆதரவு கொடுத்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம். ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் ஸ்டாலின் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம். சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து, பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாகப் பேசியதான குற்றச்சாட்டில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து, கோவை அழைத்து வருகின்றனர்.

கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது.    இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் கோவைக்கு மாற்று வாகனத்தில் அழைத்து சென்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் நேரடி ஆதரவு காரணமாகவே சவுக்கு சங்கர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெண் போலீஸ் அதிகாரிகள் தங்களுடைய புரமோஷன் மற்றும் சில வசதிகளுக்காக மேலதிகாரிகளுடன் அட்ஜெஸ்ட் செய்வதாகப் பேசியிருந்தார் சவுக்கு சங்கர். இது போல் அவர் நிறையவே பேசியிருந்தாலும் இப்போதைய கைது அரசியல் பழி வாங்கல் என்றே சொல்லப்படுகிறது.

சவுக்கு சங்கருக்காக மீண்டும் களம் இறங்குவாரா எடப்பாடி..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link