ஓட்டுக்கு துட்டு இல்லை. திமுக, அதிமுகவுக்கு டெபாசிட் சிக்கல்..?

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிட்டது. த.வெ.க., அ.தி.மு.க., திமுக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் சார்பில், நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பிரசாரமும் களைகட்டத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் பணம் கொடுத்த திமுக, அதிமுக இந்த இடைத்தேர்தலுக்குப் பணம் கொடுக்கப்போவதில்லை என்பதால், அவர்களுக்கு ஓட்டு கிடைப்பது சிக்கல் என்கிறார்கள். நேற்றைய தினம் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் ஆதவ், ‘’தமிழக […]
உசிலம்பட்டிக்கு தாய்மாமன் விஜய் விஜயம். 1,28,00 தங்க மோதிரம் ரெடி

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வரும் 28ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாரம்பரிய ‘தாய்மாமன் சீர்’ முறையை நினைவூட்டும் வகையில், தலா 13,600 ரூபாய் மதிப்பிலான 1 கிராம் (22 கேரட்) தங்க மோதிரம் அரசு […]
விஜய் பாக்கெட்டில் அன்புமணி… செளமியாவுக்கு அமைச்சர் பதவி?

இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பா.ம.க. ஆதரவு இல்லை என்று அன்புமணியின் அறிவிப்பு விஜய்யின் சாணக்கியத்தனத்துக்குக் கிடைத்த வெற்றி என்று தவெகவினர் கொண்டாடி வருகிறார்கள். மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் பா.ம.க. போட்டியிடாத நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார். மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசும் அதிமுகவினர், […]
இடைத்தேர்தலுக்கு விஜய் 4 நாள் ஸ்கெட்ச்… கொத்துப்புரோட்டா எதிர்க்கட்சிகள்

நடைபெற இருக்கும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய்யின் அஜெண்டாவாக மாறியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்த இடைத்தேர்தலில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார் என்றே அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்த நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்வது உறுதியாகியுள்ளது. இடைத்தேர்தலில் 4 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு, தொகுதிக்கு தலா இரு நாட்கள் என இரண்டு […]
8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு. விஜய் அட்டகாச அறிவிப்பு

Breakfast for students up to Class 8: Vijay’s fantastic announcement.
விஜய் சொல்கிறார், கவர்னர் செய்கிறார். இதுதான் உண்மையான மாற்றம்

முந்தைய திமுக அரசு ஏராளமான மசோதாக்களை நிறைவேற்றி கவர்னர் மாளிகைக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து எந்த ஃபைலும் நகராது. அதை திமுகவினர் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். மசோதா நிறைவேற்றியதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று அமைதியாகிவிடுவார்கள். ஆனால், இப்போது ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியிருக்கிறது. விஜய்யின் தவெக அரசு தனது முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றிய 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பது சரித்திர சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றிய […]
அன்பில் மகேஸ்க்கு சம்மன். உதயநிதிக்கு வலை..?

அன்பில் மகேஸ்க்கு சம்மன் அனுப்பப்பட்டதின் பின்னணியில் பல்வேறு மர்மக் கதைகள் உலா வருகின்றன. சோதனையின் அடிப்படையில் பல திருப்பங்களும் சிக்கல்களும் இருப்பதாகவும், இதில் உதயநிதி சிக்கவைக்கும் ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய […]
விஜய் சென்னை ரிடர்ன். வழியெங்கும் உற்சாக வரவேற்பு

ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்ற முதல்வர் விஜய் இன்று காலை தாயகம் திரும்பினார். லண்டனிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தமிழ்நாட்டை […]
மதுரையில் கோலாகல குடமுழுக்கு. விஜய்க்கு மக்கள் வாழ்த்து

17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில், யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரை கலசங்களில் எடுத்து சென்று கோபுரங்கள் மீது ஊற்றினர் சிவாச்சாரியார்கள். ஒரே நேரத்தில் 12 கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு வாசல்களில் இருந்தும் தரிசனம் செய்தார்கள். இந்த நிலையில் விஜய்யின் வாழ்த்து செய்தி இந்துக்களுக்கு பெருமகிழ்ச்சி கொடுத்துள்ளது. விஜய்யின் வாழ்த்துச் செய்தியில், ‘’தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை […]
தாம்பரத்தில் டெண்டர் செட்டிங்… ஊழலுக்கு விஜய் சாட்டையடி

ஊழல் செய்ய மாட்டேன், ஊழல் செய்பவர்களை விடவும் மாட்டேன் என்று கூறிய முதல்வர் விஜய், தவறு செய்த அதிகாரி மீது எடுத்திருக்கும் நடவடிக்கை மக்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இது குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு சிலைகளை அமைச்சர் சரத்குமார் திறந்து வைக்கிறார். இந்த இரண்டு சிலைகளுக்கும் போடப்பட்ட டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே சிலைகளுக்கு திறப்பு விழாவை நடத்தி முடித்து இருக்கிறார்கள். அதாவது டெண்டர் திறந்து இரண்டு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை […]

