News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்ற இயலவில்லை என்று மன்னிப்பு கோரியிருக்கும் மதுரை கலெக்டர், தகுந்த விளக்கம் கொடுத்து தவெக அரசுக்கு சிக்கல் ஏற்படாமல் காப்பாற்றியிருக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கு மதுரை ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி 17 பக்க முதற்கட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனமார்ந்த மன்னிப்பு கோருவதாக மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

அதோடு,  தீபம் ஏற்றுவதற்கும் தேவஸ்தானத்தின் அனுமதியை பெறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்தது எனவும், ஆனால் அறங்காவலர் குழு போட்ட தீர்மானத்தில் வழக்கமான உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற முடிவு செய்திருந்ததன் காரணமாக நீதிமன்றம் குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை எனவும் அறிக்கையில் மதுரை ஆட்சியர் குறிப்பிட்டிருக்கிறார்.

தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் குழுவினரால் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் தேவஸ்தானம் 10 பேர் கொண்ட பெயர்களை பரிந்துரைக்கவில்லை என அவர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நபர்களுக்கான அதிகாரம் அளித்து கோவில் நிர்வாகம் எந்த கட்டத்திலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கவில்லை எனவும் அறிக்கையில் கூறியிருக்கிறார். உத்தரவில் குறிப்பிட்ட 6 மணி முதல் 6.30 மணி வரை தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபத்தூணில் தீபம் ஏற்ற வரவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கும் மின்னஞ்சலில் நினைவூட்டிய போதும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற தீர்மானித்தது என்றும் முதல்கட்ட அறிக்கையில் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

 

அதேநேரம், மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்கான நடைமுறைகளை செய்யாமல் திட்டமிட்டே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றியதற்கு மாவட்ட ஆட்சியர் தான் காரணம் என்றும் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இன்றே விசாரணைக்கு வருகிறது.

என்ன தீர்ப்பு சொல்லப்படும் என்பதைப் பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link