News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பா.ம.க. ஆதரவு இல்லை என்று அன்புமணியின் அறிவிப்பு விஜய்யின் சாணக்கியத்தனத்துக்குக் கிடைத்த வெற்றி என்று தவெகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் பா.ம.க. போட்டியிடாத நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார். மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசும் அதிமுகவினர்,  ‘’இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு அதிமுக மூத்த தலைவர்கள் பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க நேரம் கேட்டபோதெல்லாம் தட்டிக் கழித்தவர், அதன்பிறகு சந்தித்தார், அப்போது அவர், ‘’2026 தேர்தலுக்கு அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாமகவினர் பம்பரமாக உழைத்தனர். ஆனால் பாமக நிற்கும் இடங்களில் அதிமுக உழைக்கவில்லை. கடமைக்கு கூட்டணி என்று இருந்தனர். அதிமுகவினர் சரியாக வேலை செய்யாததால் தான் பாமக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது’’ என்று அதிமுக மீது அவர் அதிருப்தி தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் பாமகவிற்கு நல்ல வாக்கு வங்கி உள்ள நிலையில் அதிமுகவை ஆதரிக்காவிட்டால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும். அவர் சமீப காலமாகவே விஜய் ஆட்சிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். திருமாவளவன் கரூர் பேச்சுக்குப் பிறகு அவருடன் இணக்கமாகப் போவதற்கு விஜய் விரும்பவில்லை. அதனால் இந்த இடைத்தேர்தலில் மாம்பழத்துக்கு விலை பேசப்பட்டு அன்புமணியை அமைதியாக்கிவிட்டார்கள். இவரது துரோகம் பழகிப்போனதுதான். ஆனாலும் அதிமுக ஜெயிக்கும்’’ என்றார்கள்.

தவெகவினரோ, ‘’இந்த தேர்தல் தவெகவுக்கு ஒரு டெஸ்ட். ஆட்சி மீது மக்களுக்கு எப்படிப்பட்ட மதிப்பு இருக்கிறது என்பதை மதிப்பிட நினைக்கிறார் விஜய். பாமக ஓட்டு அதிமுகவுக்குப் போகக்கூடாது என்பதைக் கணக்கிட்டு திசை திருப்பிவிட்டார். இப்போது தவெக ஜெயித்தால் பாமக கூட்டணிக் கட்சியாகிவிடும். திருமா கட்சியை வெளியே அனுப்பிவிட்டு செளமியாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும்.’’ என்கிறார்கள்.

திருமாவுக்கு சிக்கல்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link