News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நடைபெற இருக்கும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய்யின் அஜெண்டாவாக மாறியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இந்த இடைத்தேர்தலில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார் என்றே அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்த நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்வது உறுதியாகியுள்ளது. இடைத்தேர்தலில் 4 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு, தொகுதிக்கு தலா இரு நாட்கள் என இரண்டு கட்டங்களாக பரப்புரை செய்வார் என தெரியவந்துள்ளது.

இந்த பிரசாரத்தின் போது ரோடு ஷோவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் அதே நேரத்தில் வாக்காளர்களை கவரும் வகையிலும் தவெக அரசின் 100 நாள் சாதனைகளை எடுத்துக் கூறியும் முதல்வர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

 இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தமிழக வெற்றிகழகத்துக்கு செல்வாக்கு உள்ள நிலையில் நடுத்தர வயதினர் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குகளை கவர்வதில் விஜய் தீவிரமாக உள்ளார். இந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு அடுத்து வரும் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட தயங்கும் வகையில் அவரது செயல்பாடு இருக்கும் என்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘வால்கிரீன்ஸ்’ (Walgreens) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் தனது உலகளாவிய திறன் மையத்தை (GCC) இங்கு அமைக்கவுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link