ராகுல் காந்தி மீண்டும் கைது. விஜய் கடும் கண்டனம்

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை காவல் துறை இரண்டாவது நாளாக கைது செய்திருக்கிறது. அவரது போராட்டத்தைத் தடுக்கும் வகையில் போலீஸார் கடுமை காட்டுவதாக சொல்லப்படுகிறது. ராகுல் காந்தி கைதுக்கு நேற்றைய தினம், ‘’தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]
அரசு ஊழியர்கள் சொத்துக்கணக்கு. விஜய் துணிச்சலான நடவடிக்கை.

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து விவரங்களை வரும் அக்டோபர் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். இது, லஞ்சம், ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு விஜய் தரும் சவுக்கடி என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், எல்லா காலகட்டத்திலும் இதுபோன்ற சட்டங்கள் நடைமுறையில் உண்டு என்றாலும், அவற்றை முழுமையாக யாரும் அமல்படுத்துவதில்லை. ஆனால், விஜய் துணிச்சலாக பூனைக்கு மணி கட்டியிருக்கிறார். இன்று தலைமைச்செயலாளர் விடுத்துள்ள உத்தரவில், ‘’தமிழக அரசு ஊழியர்கள் […]
ஆட்சியைக் கலைப்பாரா திருமாவளவன்..? விஜய் தீவிர ஆலோசனை

விஜய்க்கு எதிராக தினமும் திருமாவளவன் ஏடாகூடமாகப் பேசிவரும் தகவல்களால் தவெகவில் கடும் எரிச்சல் உருவாகியுள்ளது. நேற்றைய தினம், ‘’தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உருவாக்க எஸ்.ஐ.ஆர். பயன்பட்டுள்ளது; இல்லையென்றால் இருமுனைப் போட்டியாகதான் இருந்திருக்கும். அதனால்தான் தேர்தல் முடிவு இப்படி வந்திருக்கிறது’’ என்று விஜய் ஆட்சியை குற்றம் சாட்டியிருந்தார். முன்னரே, கரூர் வழக்கில் விஜய்யை கைது செய்திருக்கவேண்டும் என்று பேசியிருந்தார். இந்நிலையில், ‘’தமிழக வெற்றி கழக ஆட்சியை திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் விரும்பவில்லை. தொடர்ச்சியாக ஆளும் அரசுக்கு எதிராக […]
மாதவரத்தில் விஜய்க்கு பலத்த வரவேற்பு. அரசியல் ஆசானே வருக

இன்று, மாதவரம் ஆவின் வளாகத்தில் ரூ.2.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாநில மைய ஆய்வக துணைக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய். இதற்கு வருகை தந்த விஜய்க்கு வழக்கம்போல் எக்கச்சக்க மக்கள் கூடி நின்று வரவேற்பு கொடுத்தார்கள். அதோடு, அவர்கள் கையில் இருந்த பேனர்கள் மக்களைக் கவர்ந்தன. அதில், ‘இளைஞர்களின் அரசியல் ஆசான்’, ‘தீயசக்தியிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றி தூய சக்தி ஆட்சி தரும் முதல்வரே வருக’ என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தன. மாதவரம் பால் பண்ணையில் புதிதாகக் […]
எக்சிட் போல் ரிசல்ட்… விஜய்க்கு அடுத்த இடத்தில் இபிஎஸ்..?

வழக்கமாக எந்த ஒரு தேர்தல் முடிந்தவுடனும், எக்சிட் போல் ரிசல்ட் பரபரப்பாக வெளியாகும். ஆனால், நேற்றைய தினத்தில் யாரும் வெளியிடவில்லை. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் 92.30 சதவீதமும், தாராபுரத்தில் 89.9 சதவீதமும் வாக்குகள் பதிவாயிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தவெகவினர் எடுத்த எக்சிட் போல் […]
வைரலாகும் சத்தியபாமா வீடியோ… யாருடைய சதி..?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவுகிறது. இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ தான் என்றும் அந்த வீடியோ உண்மை இல்லை என்றும் சத்தியபாமா தெளிவுபடுத்தி உள்ளார். ஆனாலும், விஷயம் சீரியஸாக பேசப்பட்டு வருகிறது. வைரலாகியிருக்கும் வீடியோவில் சத்யபாமா, “எடப்பாடி பத்து பைசா கூட எடுக்க மாட்டாரு… போன தடவை நான் ரூ.31 கோடி செலவு செஞ்சேன்… ஆனா ஒரு பைசா […]
செவிலியர்களுக்கு நல்ல தீர்வு..? விஜய் தீவிர ஆலோசனை

நேற்றைய தினம் செவிலியர்கள் போராட்டமும் அதை முடிவுக்கு கொண்டுவர காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையும் தவெக அரசு மீது பலரும் விமர்சனம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளது. எனவே, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு விஜய் தீவிர ஆலோசனை செய்துவருகிறார். தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 7,500 செவிலியர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிகப்பணியாளர்களுக்கும், நிரந்தரப் பணியாளர்களுக்கும் ஒரே மாதிரி வேலை என்றாலும் ஊதியத்தில் பெரும் வித்தியாசம் இருக்கிறது. தற்காலிகப்பணி செய்யும் செவிலியர் ஊதியம் 18,000 ரூபாயாகவும் […]
இடைத்தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு. அடுத்த ஐந்துக்கு விஜய் ரெடி

இன்று காலை முதல் தாராபுரம் ,மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். விஜய் ஆட்சியில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் விஜய் அதிக ஆர்வம் காட்டினார். இதில் வெற்றி உறுதி என்பதில் விஜய்க்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எனவே, அடுத்த 7 தொகுதி இடைத்தேர்தலுக்கு இப்போதே தயார் என்கிறார்கள். கடந்த 2026 பொது தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93% , தாராபுரம் 90% வாக்குகள் பதிவாகியிருந்தது. இன்று […]
தாய் மாமனுக்கு அடுத்து அண்ணன் சீர்… விஜய் அட்டகாசம் தொடர்கிறது

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அண்ணன் சீர் திட்டத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், பட்டு புடவையும் வழங்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது, விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் புதிதாகத் திருமணம் செய்யும் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அண்ணன் சீர் திட்டம் அதிகாரப்பூர்வமாக […]
துவரம்பருப்பு கொள்முதலில் விஜய் அரசுக்கு செம மிச்சம். திமுக ஊழல் அம்பலம்

முந்தைய திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம்பருப்பு 109.15 ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போதைய தவெக அரசு அதைவிட சுமார் 31 அல்லது 29% குறைவாக, அதாவது கிலோ 77.89 ரூபாய் என்ற விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது விநியோகத்திற்காகக் கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மாநில அரசுக்கு. 187.56 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 60,000 டன் துவரம்பருப்பைச் பெற 467.34 […]

