Share via:
எதிர்கட்சி தலைவர் ராகுல்
காந்தியை காவல் துறை இரண்டாவது நாளாக கைது செய்திருக்கிறது. அவரது போராட்டத்தைத் தடுக்கும்
வகையில் போலீஸார் கடுமை காட்டுவதாக சொல்லப்படுகிறது.
ராகுல் காந்தி கைதுக்கு நேற்றைய தினம்,
‘’தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும்
அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி,
டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட
தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம்
கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட
வேண்டும்…’’ என்று கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாளும் ராகுல் காந்தி
கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன்,
‘’நேற்றும் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லி போலீஸ் கையாண்ட
முறை ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறது. ஊடகப் பார்வைக்குத் தெரியாமல், போராடுபவர்களின்
உடலில் பெரும் வன்முறையைச் செலுத்தும் தெளிவான உத்தரவு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எம்.பி.க்களையே இவர்கள் இப்படித்தான் கையாள்வார்கள் என்றால், மாணவர்களையும் இளைஞர்களையும்
எப்படி கையாள்வார்கள் என்பது வெளிப்படை. ஆனால், அதிகாரத்தின் இந்த வன்முறைகள் மக்கள்
எழுச்சியால் முறிக்கப்படும் என்ற வரலாற்றின் கரம் பற்றித்தான் ஜந்தர் மந்தர் நோக்கி
அவர்கள் அணிதிரளத் தயாராகிறார்கள்.’’ என்று கூறியிருக்கிறார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் நடவடிக்கையால் தொடர்ந்து சில நாட்களாக
டெல்லி மாநகரமே போராட்ட களமாக மாறி இருக்கிறது அதுமட்டுமல்ல மோடி அரசின் அடக்குமுறை
அதிகரித்திருக்கிறது.
பாஜக அரசு எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு தேர்தல் ஆணையத்தை
கையில் வைத்து கொண்டு தான் விரும்பிய தேர்தல் முடிவுகளை கொண்டு வருகிறது என்கின்ற குற்றச்சாட்டு
பலமாக எழுந்திருக்கிறது. சமீபகாலமாக நடைபெற்ற தேர்தல்களில் முழுக்க முழுக்க முறைகேடுகள்
நடைபெற்றிருக்கிறது என்பதை தற்போதைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது மாணவர்களும்,
இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னெழுச்சியாக போராட்டங்களை
நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தின் வலிமையால்தான் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த
தர்மேந்திர பிரதான் பதவியை விட்டு துரத்தப்பட்டார். இப்போது தலைமை தேர்தல் ஆணையர் குறித்த
பிரச்சனையில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது. நிச்சயமாக அவர் ராஜினாமா
செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

