Share via:
இன்று, மாதவரம் ஆவின் வளாகத்தில் ரூ.2.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாநில மைய ஆய்வக துணைக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய். இதற்கு வருகை தந்த விஜய்க்கு வழக்கம்போல் எக்கச்சக்க
மக்கள் கூடி நின்று வரவேற்பு கொடுத்தார்கள்.
அதோடு, அவர்கள் கையில் இருந்த பேனர்கள் மக்களைக் கவர்ந்தன. அதில்,
‘இளைஞர்களின் அரசியல் ஆசான்’, ‘தீயசக்தியிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றி தூய சக்தி
ஆட்சி தரும் முதல்வரே வருக’ என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தன.
மாதவரம் பால் பண்ணையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்துவைத்த முதல்வர் விஜய், பால் பண்ணையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதோடு, புதிய பால் பண்ணை வசதிக்கான கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு வந்ததைப் பார்த்தவுடன் ஆர்ப்பரித்த மக்களை திரும்பி பார்த்து முதலமைச்சர் விஜய் கை காட்டி தன்னுடைய மகிழ்ச்சியைத்
தெரிவித்தார். அதோடு, சி.எம். சார் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா என்று ஓடி வந்து கேட்ட மாதவரம் ஆவின் பால் பண்ணை காவலாளியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
மாதவரம் பால் பண்ணையில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், பெரம்பூரில் உள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்றார் விஜய். ஒரு எம்.எல்.ஏ.வாக
தன்னுடைய கடமையைச் செய்வது முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அசத்துகிறார் விஜய்.

