ஆளுநர் ஒப்புதலுக்குத் தடை. முதல்வர் விஜய் அதிரடி

தமிழகத்தின் மிக முக்கியப் பதவிகளான தலைமைச் செயலாளர் மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் ஆகியோரை நியமிப்பதில், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த தமிழக ஆளுநரின் முன்அனுமதி பெறும் நடைமுறையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த இரு உயர்பதவிகளுக்கான நியமன உத்தரவுகளை ஆளுநரின் ஒப்புதல் அல்லது அனுமதி இன்றியே மாநில அரசு நேரடியாகப் பிறப்பிக்க முடியும். மனித வள மேலாண்மைத் துறை சார்பில் கடந்த ஜூலை 29ம் தேதியிட்ட புதிய நிலையான வழிகாட்டுதல் […]
ஸ்டாலினுக்கு இறுதி எச்சரிக்கை. விஜய் மாட்டுவண்டியில் அசத்தல்

விவசாயப் பெருமக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் டிராக்டர் ஓட்டி அசத்திய விஜய், நேற்றைய தினம் மாட்டுவண்டி ஓட்டினார். அதொடு, பெண்களை இழிவாகவும் அவதூறாகவும் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களித்து ஆதரவளிக்கக் கூடாது என்று தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்த முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வந்தார். அங்கிருந்த பிரச்சார வேனில் ஏறி ரோடு ஷோவை தொடங்கிய விஜய், சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களை […]
இப்படி மாட்டிக்கிட்டாரே உதயநிதி. சிறுவன் பேச்சுக்கு வழக்குப்பதிவு

தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, அவருக்கு மிகப்பெரும் சிக்கலாக அமையும் என்று சொல்லப்படுகிறது. பிரசாரத்துக்கு வந்த குழந்தையைத் தூக்கி பிரச்சார வாகனத்தில் வைத்து ஓட்டு கேட்டது மட்டுமல்லாமல், முதல்வர் விஜயை இழிவுபடுத்தும் வார்த்தையும் குழந்தைக்கு சொல்லி கொடுத்து குழந்தையைபேச வைத்திருக்கிறார் உதயநிதி. அந்த சிறுவன், ‘ஓம் காளி, ஜெய் காளி, விஜய் ஒரு ஓடுகாலி’ என்று பேசியதை அடுத்து விவகாரம் வில்லங்கமாகியிருக்கிறது. […]
மதுராந்தகம், தாராபுரம் ஃபைனல் சர்வே. விஜய் விசிலுக்கு டபுள் சக்சஸ்

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் களத்தில் விஜய், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூன்று பேரும் கடுமையாக மோதி வருகிறார்கள். இந்த பெருந்தலைகளுக்கு இடையில் நாம் தமிழர் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் களம் இறங்கியுள்ளதால் ஐந்து முனைப் போட்டி நடக்கிறது. கடைசி கட்ட தேர்தல் கருத்துக்கணிப்புப்படி, இரண்டு தொகுதியும் அதிமுக கையில் இருந்து நழுவி விஜய் கையில் விழுவதாகத் தெரிகிறது. மதுராந்தகம் கடந்த 2026 […]
விவசாயத் தோழன் விஜய்… பயிர்க்கடனுக்கு நல்ல செய்தி

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி அறிவித்திருக்கிறார் முதல்வர் விஜய். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் அதிரடியாக பாராட்டப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில், ‘கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை […]
ஸ்டாலினை ஓட ஓட விரட்டுறாங்க… இப்படி பேசலாமா..?

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று உருவக்கேலி செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தவெகவினரும் பொதுமக்களும் ஸ்டாலினுக்கு எதிராக தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர். தாராபுரம் இடைத்தேர்தலில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட நிலையில், ‘’ இங்கே நிற்பவர் பெட்டி பாமா, பல்டி பாமா. இந்த உடலை வைத்துக் கொண்டு எப்படித்தான் பல்டி அடித்தாரோ?’’ என பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மிகப்பெரிய ஒரு கட்சியின் […]
மக்களோடு மக்களாக விஜய்… எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் காலி..?

விஜய்யால் ஒரு நாளும் மக்களோடு மக்களாக நிற்க முடியாது. கோட் சூட் போட்டு அலைவதற்குத்தான் சரிப்படுவார் என்ற கருத்தை உடைத்துக் காட்டியிருக்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக டெபாசிட் வாங்க கூடாது என்பதற்காக கடுமையாக உழைக்கத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே மதுராந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார் என்றாலும் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை 7 மணி நேரம் 40 கிலோமீட்டர் பிரசாரம் மேற்கொண்டார். விஜய்யின் […]
இருமொழிக் கொள்கையில் உறுதி. இந்தியை அழித்து விஜய் அதிரடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருந்த செய்தி வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ந்தது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அன்புமணி வரையிலும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்நிலையில், இந்திஎதிராக போராடிய தமிழகத்தில் மாநில அரசே இந்தியில் பெயர்களை எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்நாடு அரசின் இருமொழி கொள்கைக்கு எதிராக […]
விஜய்க்கு சாக்லேட் டிக்கெட். வெற்றிப்பயணத்துக்கு பெண்கள் விசில்

பெண்களுக்கான இலவச வெற்றிப் பயணத்தை இன்று முதல்வர் விஜய் விசிலடித்து தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம், மாநகரம் நகர்ப்புறம் பகுதிகளில் சாதாரண, எக்ஸ்பிரஸ் ,எல் எஸ் எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் புறநகர் பகுதிகளில் சாதாரண சேவை பேருந்துகளிலும் மலைப்பகுதிகளில் சாதாரண சேவை பேருந்துகளிலும் இனி தமிழ்நாடு முழுக்க பெண்கள் இலவசமாக பயணம் செய்யமுடியும். இன்று அறிவிப்பு செய்திருந்தபடி கோயம்பேட்டில், தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து பயணமான மகளிர் வெற்றிப் பயண திட்டத்தை முதல்வர் விஜய் […]
மதுராந்தகத்தில் இன்று விஜய் திருவிழா. 35 இடங்களில் ரோடு ஷோ…

இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுராந்தகத்தில் இன்று 45 கி.மீ தூரத்திற்கு விஜய் ரோடு ஷோ போகிறார். இதை கடக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 35 இடங்களில் விஜய்க்கு பாயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுராந்தகம் இன்று மதியம் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக […]

