Share via:
வழக்கமாக எந்த ஒரு தேர்தல் முடிந்தவுடனும், எக்சிட் போல் ரிசல்ட்
பரபரப்பாக வெளியாகும். ஆனால், நேற்றைய தினத்தில் யாரும் வெளியிடவில்லை.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில்
80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
மதுராந்தகத்தில் 92.30 சதவீதமும், தாராபுரத்தில் 89.9 சதவீதமும் வாக்குகள்
பதிவாயிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் தவெகவினர் எடுத்த எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதில் மதுராந்தகத்தில் தவெக 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் தாராபுரம் தொகுதியில்
4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த
இரண்டு தொகுதியிலும் விஜய்க்கு அடுத்த இடத்தில் அதிமுக இருக்கிறது என்றும் திமுகவுக்கு
மூன்றாவது இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏற்கெனவே இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது என்பதால்,
திமுக களத்தில் இல்லை என்கிறார்கள்.
அப்படி விஜய் வெற்றி பெற்றால், இது, சாதாரண வெற்றி இல்லை. குறிப்பாக
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பல கிலோமீட்டர் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து
வாக்கு கேட்டது தான் இந்த வெற்றிக்கு பிரதான காரணமாக இருக்கும். விஜய் பிரச்சாரம் மட்டும்
இல்லை என்றால் நிச்சயம் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் இந்த போட்டியை தாக்குப் பிடித்திருக்க
வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

