Share via:
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அண்ணன்
சீர் திட்டத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், பட்டு புடவையும்
வழங்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது, விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
ஆக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாகத் திருமணம் செய்யும் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக்
குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர்
உரிமைத் துறை சார்பில் அண்ணன் சீர் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்
புடவை வழங்குவதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல்கள் வழங்கப்பட்டு, இதற்கான அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி,
“திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணம்.
அந்தத் தருணத்தில், ஒரு அண்ணனாக அரசே உடனிருந்து மணப்பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும்
வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை முதற்கட்டமாகத்
தொய்வின்றிச் செயல்படுத்துவதற்காக 812 கோடி ரூபாய் நிதியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசுத் திட்டங்களில் இடைத்தரகர்களின் தலையீடு மற்றும் முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கும்
பொருட்டு, ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே பெறப்படும்’’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பெண்களின் நலனையும், குடும்பங்களின் திருமணச் செலவுச் சுமையையும்
பெருமளவு குறைக்கும் இந்த ‘அண்ணன் சீர்’ திட்டம் மகளிர் நலன் காக்கும் அரசின் மக்கள்
நலப் பயணத்தில் மற்றுமொரு மிக முக்கியமான மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக பார்க்கப்படுகிறது.
தாய் மாமனாக சீர் கொடுத்தவர் இப்போது அண்ணனாகவும் சீர் கொடுக்கிறார்.

