Share via:
முந்தைய திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம்பருப்பு 109.15 ரூபாய்க்கு
வாங்கப்பட்ட நிலையில், தற்போதைய தவெக அரசு அதைவிட சுமார் 31 அல்லது 29% குறைவாக, அதாவது
கிலோ 77.89 ரூபாய் என்ற விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது விநியோகத்திற்காகக்
கொள்முதல் செய்துள்ளது.
இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மாநில அரசுக்கு. 187.56 கோடி
ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில்
60,000 டன் துவரம்பருப்பைச் பெற 467.34 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு
ஜூலை முதல் திமுக அரசு அதே அளவு, தரம் மற்றும் அம்சங்கள் கொண்ட பருப்பைக் கொள்முதல்
செய்ய மூன்று மாதத்திற்கு ஒருமுறை 654.9 கோடி ரூபாய் செலவிட்டு வந்தது.
இப்போது அதிக விலைக்கு பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது ஏன் என்ற
விளக்கத்தை முந்தைய திமுக அரசு சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு திமுகவினர்
விளக்கம் சொல்லாமல், இப்போது சந்தையில் இந்த பருப்பின் விலை 31% குறைந்துள்ளதுதான்
காரணம் என்று சமாளிக்கிறார்கள்.
மக்களின் பணத்தை மிச்சப்படுத்துவதும் ஒரு சாதனைதான். ஊழலுக்கு இடமில்லை வீண்செலவுக்கு இடமில்லை மக்கள் பணம் மக்களுக்கே என்பதுதான் இதுதான் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாக மாடல். இதுதான் விஜய் ஆட்சி. இதுதான் தவெக மாடல்.
கடந்த ஆட்சிகளில் நடந்த ஊழல்கள் தோண்டியெடுக்கப்பட வேண்டும். தவறு
செய்தவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும்.

