News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவுகிறது. இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ தான் என்றும் அந்த வீடியோ உண்மை இல்லை என்றும் சத்தியபாமா தெளிவுபடுத்தி உள்ளார். ஆனாலும், விஷயம் சீரியஸாக பேசப்பட்டு வருகிறது.

வைரலாகியிருக்கும் வீடியோவில் சத்யபாமா, “எடப்பாடி பத்து பைசா கூட எடுக்க மாட்டாரு… போன தடவை நான் ரூ.31 கோடி செலவு செஞ்சேன்… ஆனா ஒரு பைசா கூட திரும்பி வரல” என்னோட நிலைமை இப்ப இங்க வந்து நிக்குறேன்’’ என்று ஆதங்கத்தோடு பேசுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே தொகுதி மக்களிடம் இவர் கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் எதிர்கொண்ட நிலையில், வாக்குப்பதிவு நாளான இன்று இந்த வீடியோ வெளியானது அவருக்கு மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தேர்தல் செலவுகளுக்காக அதிகபட்சமாக 45 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவிட அனுமதி உண்டு. தேர்தல் முடிவடைந்தவுடன், வேட்பாளர் தனது செலவுக் கணக்குகளை தேர்தல் அதிகாரியிடம் முறையாகக் கணக்குக் காட்டி சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், அதிகாரப்பூர்வ வரம்பை விட பன்மடங்கு அதிகமாக, அதாவது 31 கோடி ரூபாய் செலவழித்ததாக வேட்பாளரே வாயால் ஒப்புக்கொள்ளும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வரம்பை அப்பட்டமாக மீறும் வகையில் இந்த பேச்சு உள்ளதால், இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ முறைப்படி புகார் அளிக்கப்பட்டால், சத்யபாமா மீது கடுமையான சட்ட மற்றும் தேர்தல் ரீதியான நடவடிக்கைகள் பாய வாய்ப்புள்ளது என்று சொல்கிறார்கள்.

அதேநேரம், இது திட்டமிடப்பட்டு வெளியான பொய் வீடியோ. அவரது கேரியரைக் கெடுக்கும் சதி என்கிறார்கள்.  

வாக்குப்பதிவு நடக்கும் மிக முக்கியமான இன்றைய நாளில் இந்த வீடியோவை வெளியிட்டு வெற்றியைப் பாதிக்கவே திமுகவும், அதிமுகவும் இணைந்து இதை பரப்புவதாகச் சொல்கிறார்கள்.

இந்த வீடியோ வெற்றியைப் பாதிக்குமா என்பது இரண்டுநாளில் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link