கருப்பு சட்டையில் மோடிக்கு விஜய் வரவேற்பு. ரயிலில் பச்சைக்கொடி

நேற்றைய தினம் ராகுல்காந்தியுடன் டீ குடித்த விஜய் இன்று பாரதப்பிரதமர் நரேந்திரமோடியுடன் பயணத்திருக்கிறார். விமான நிலையத்தில் கருப்புச்சட்டையுடன் சென்று வரவேற்பு கொடுத்தது சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ன் வழித்தடம் 4-ன் முதற்பகுதியான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவையை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்த நரேந்திர மோடியை […]
விஜய் மக்களுக்கு சல்யூட். ஸ்டாலினுக்கு நோஸ் கட்

இடைத்தேர்தல் வெற்றி அடைந்திருக்கும் தவெக பற்றி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பணத்தினால் வாங்கிய வெற்றி என்று கூறியிருந்தார். அதற்கு முதல்வர் விஜய் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். விஜய் கொடுத்திருக்கும் அறிக்கையில், ‘’மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு […]
டெல்லியில் எமர்ஜென்சி…. இளைஞர் போராட்டத்தை வெல்வாரா மோடி..?

டெல்லியில் போராட்டத்திற்கு வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதோடு டெல்லி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பார்க்கும் அத்தனை பேரையும் கைது செய்யப்படும் நிலையில், கலவரம் உருவாக்குவதற்காக ஜந்தர் மந்தர் அருகே உள்ள சிவாஜி பாலத்தை பஜ்ரங் தள மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் களம் இறக்கி உள்ளனர். ஆகவே, டெல்லியில் மினி எமர்ஜென்சி நிலவுகிறது. தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று […]
லஞ்ச ஒழிப்புத்துறையில் பிரேம் ஆனந்த் சின்ஹா… அதிர்ச்சியில் திமுக மாஜிக்கள்?

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையின் புதிய இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டது, மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையை மகேஸ்வரி கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார்கள்.. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் சின்ஹா தமிழக காவல்துறையில் மிகவும் நேர்மையான, கண்டிப்பான, அதே நேரத்தில் மக்களிடம் அன்பான அதிகாரி என பெயரெடுத்தவர். 2001-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தற்போது தமிழக அரசின் மிக முக்கியமான பொறுப்பான லஞ்ச […]
விஜய்க்கு டபுள் சக்சஸ். படையெடுக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..?

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர். தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகள் நிறைவில் தவெக வெற்றி பெற்றுள்ளது. தவெக – சத்யபாமா: 66,841 திமுக – சுகன்யா: 57,370 அதிமுக – பானுமதி: 45,280 நாதக – கார்த்திகா – 5268 இந்திய கம்யூனிஸ்ட் – ப.லட்சுமணன் […]
கடந்த தேர்தலை விட விஜய்க்கு அதிக வாக்குகள். ஆட்சிக்கு அங்கீகாரம்.

கடந்த பொதுத்தேர்தலில் தவெக வாங்கிய வாக்குகளை விட, இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தவெக வெற்றிபெறுவது உறுதியாகியிருப்பதால், தவெக ஆட்சிக்கு மக்கள் பாஸ் மார்க் போட்டிருப்பது உறுதியாகிவிட்டது. கடந்த தேர்தலில் தாராபுரத்தில் டிவிகே வாங்கிய வாக்குகள் 46,438. தற்போது மொத்தமுள்ள 23 சுற்றுக்களில் 16வது சுற்றிலேயே 48,675 வாக்குகளை பெற்றுவிட்டார்கள். இனி போகப்போக இந்த வாக்குகள் கடந்த தேர்தலை விட அதிகரிக்க தான் செய்யும். ஆனால் 64,373 வாக்குகள் வாங்கி இருந்த திமுக 30,039 வாக்குகள் […]
அண்ணனுக்கு ஜே… மண்ணைக் கவ்வும் திராவிடக் கட்சிகள்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்றுக்குப் பின் தாராபுரத்தில் அதிமுக முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது தவெக மீண்டும் முன்னிலை வகித்து வருவது கவனிக்கத்தக்கது. மதுராந்தகம் முன்னிலை நிலவரம்: தவெக – மரகதம் குமரவேல்: 31,067 திமுக – பரந்தாமன்: 20,648 அதிமுக – கனிதா சம்பத்: 17,681 சிபிஎம் – பி.சுகந்தி: 766 நாதக […]
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம். உள்துறைக்கு கார்த்திக், மின்சாரத்துக்கு ராஜேஷ் லக்கானி.

தமிழகத்தில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் இடமாற்றம் செய்யப்படுள்ளனர். மின்சாரத் துறைக்கு ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்படி டாக்டர் கே. மணிவாசன், ஐ.ஏ.எஸ். – கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) பொறுப்பிலிருந்து நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.ஆர். கார்த்திக், ஐ.ஏ.எஸ். டான்சிட்கோ நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொறுப்பிலிருந்து உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வி. அருண் […]
தவெகவின் சாதனை. பட்டியலின மக்களுக்காக பூட்டு உடைத்த பெண் எஸ்.பி.

வழிபாட்டுக்கு யாரும் யாரையும் போகக் கூடாது ன்னு சொல்ல உரிமை இல்லை, தைரியம் இருந்தா முன்னாடி வந்து பேசுங்க என்று சிங்கப்பெண் போன்று குரல் கொடுத்து பட்டியலின மக்களை 50 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்குள் அனுமதித்திருக்கிறார் எஸ்.பி. ஷானாஸ். இதுவரையிலான ஆட்சியில் திராவிட அரசு பேருக்காக பேச்சுவார்த்தை நடத்துமே தவிர, உருப்படியாக எதுவும் காரியம் நடக்காது. முதன்முறையாக 50 ஆண்டு பழக்கத்தை அடித்து உடைத்திருக்கிறார். இது, தவெக ஆட்சி என்பதாலே சாத்தியமானது எனலாம். இதுகுறித்து, ‘’குரால் கிராமத்து […]
விஜய் ஃபார்முலாவில் சிவகார்த்திகேயன்? சுட்டுப் பொசுக்கும் தவெகவினர்

விஜய் அரசியலுக்கு நுழைவதை சூசகமாகச்சொல்லி, துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு வந்தார். அந்த விஜய்க்கு எதிராகவே சிவகார்த்திகேயன் கட்சி தொடங்க இருப்பது போன்று பில்டப் கொடுத்திருப்பது தவெகவினரை கடும் கோபத்தில் தள்ளியிருக்கிறது. அதனால் கடுமையான விமர்சனம் வைக்கிறார்கள். ரசிகர் மன்றத்தின் மூலம் நற்பணிகள் செய்வதும், கட்சி தொடங்குவதும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், விஜய்யை காப்பியடிக்க வேண்டாம் என்பதுதான் தவெகவினர் கோரிக்கை. விஜய் ரசிகர்களுக்கு ஏற்ப சினிமா விமர்சகர் ஒருவர், ‘’என்னை வாழவைக்கும் மக்களுக்கு ஏதாவது செய்யணும் […]

