News

Follow Us

நாக்கை அடக்குங்க மிஸ்டர் மோடி

கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக வரும் ஆசையில் மிகத் தீவிரமாக தேர்தல் பரப்புரை செய்துவருகிறார்.  10 ஆண்டு காலத்தில் என்னவெல்லாம் சாதனைகள் செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு என்பதை எடுத்துச்சொல்ல முடியாமல் எதிர்க் கட்சிகள் மீது மதத் துவேச குற்றச்சாட்டுகள் வைப்பதையே தொடர்ந்து செய்துவருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்து மக்களின் தாலியை பறித்துவிடும், உங்களிடம் இரண்டு எருமை இருந்தால் ஒன்றை பறித்துவிடும், உங்கள் […]

தேர்தல் வெற்றிக்கு மோடியின் ஆள் கடத்தல் ஆரம்பம்

வழக்கமாக தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைப்பது தான் பா.ஜ.க.வின் தேர்தல் டெக்னிக். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் புதிய டெக்னிக்கை மோடி அரசு கையாளத் தொடங்கியுள்ளது. குஜராத்தின் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் போலி சாட்சிக் கையெழுத்து என்று காரணம் காட்டி அவரை நிராகரித்தனர். அது மட்டுமின்றி மீதமுள்ள அத்தனை வேட்பாளர்களையும் கட்டாயப்படுத்தி வாபஸ் வாங்க வைத்ததால், அங்கு தேர்தல் நடத்தாமலே பா.ஜ.க. வேட்பாளர் எம்.பி. ஆகிவிட்டார். […]

மோடியும் ஸ்டாலினும் பத்திரிகை சுதந்திரப் போராளிகள்

மே 3ம் தேதி அனுசரிக்கப்படும் உலக பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான அதேசமயம் ஆக்கப்பூர்வமாக செயல்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகம் என்பது மிக முக்கியமான அமைப்பாகும். நவீன யுகத்தில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்த காலத்தில் ஊடகத்தின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாததாக, மாறியுள்ளது. எனவே, சுதந்திரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பத்திரிகையாளர்கள் செயல்படுவதற்கான களம் தற்போது அமைந்துள்ளது’ என்று கூறியிருந்தார்.  அதேபோன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

தேர்தல் கமிஷனும் இப்படி கைப்புள்ள கணக்கா மாறிடிச்சே…

மத்திய பா.ஜ.க. அரசின் அடியாட்கள் போலவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியில் இப்போது தேர்தல் கமிஷனும் சேர்ந்திருப்பது ஜனநாயக நம்பிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. பொதுவாக தேர்தல் பிரசாரத்தில் மதம், ஜாதி துவேஷம் குறித்து பேசக்கூடாது என்பது விதிமுறையாக இருக்கிறது. ஆனால், தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறி வைத்து பேசி வருகிறார்.  இந்துக்களின் சொத்துக்களை எல்லாம் பறித்து முஸ்லீம்களுக்கு […]

பிரதமர் மோடியின் பத்தாண்டு ஆட்சியின் ஒரே சாதனை அதானி

ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தலை சந்திக்கும் நேரத்தில், நாங்கள் இப்படிப்பட்ட சாதனகள் எல்லாம் ஆட்சியில் செய்திருக்கிறோம் என்று பட்டியல் போட்டு ஓட்டு சேகரிப்பதே வழக்கம். ஆனால், பிரதமர் மோடி அந்த விஷயத்தில் கில்லாடி. சொன்ன சொல்லை மாற்றிப் பேசாதவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த நேரத்தில், நாட்டின் இந்த மோசமான நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியும் முதல் பிரதமர் நேருவும் என்று குற்றம் சாட்டினார். அந்த வார்த்தைகளை இன்று வரையிலும் அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. நேரு தொடங்கிய அத்தனை […]

சிரிப்பு காட்டாதீங்க போலீஸ்

மெகா திருடர்களுக்கு எல்லாம் சல்யூட் அடித்து மரியாதையாக அனுப்பிவைப்பதும், குட்டியூண்டு பிக்பாக்கெட் திருடர்களை கட்டி வைத்து உரிப்பதும் போலீஸாருக்கே உள்ள தனித்திறமை.  அதேபோல் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி போன்ற நபர்கள் நாட்டில் மதக்கலவரம் உண்டாக்கும் அளவுக்குப் பேசினாலும் அதை கண்டும் காணாதவர் போன்று இருக்கும் போலீஸ், லோக்கலில் சாதாரணமாகப் பேசினாலும், அது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று முட்டியை பெயர்த்துவிடுவார்கள். வழக்கமாக கோடையில் வெயில் அடிக்கும், தார் ரோட்டில் அனல் பறக்கும். இதுபோன்ற தருணங்களில் கோடையின் […]

எடப்பாடி பழனிசாமி நல்லா காமெடி பண்றாப்ல…

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. தலைமையகத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரிடம் எல்லா நிர்வாகிகளும் விசுவாசமாக இருந்தார்கள். அதனால் கட்சி தொடர்ச்சியாக ஜெயித்துக்கொண்டு இருந்தது.  நீங்கள் யாருமே இப்போது எனக்கு விசுவாசமாக இல்லை. தேர்தலுக்கு யாரெல்லாம் வேலை செய்யலைன்னு எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கு. இனியாவது எனக்குத் துரோகம் செய்யாம விசுவாசமா இருங்க…’ என்று பாடம் எடுத்திருக்கிறார். இதை கேட்ட நிர்வாகிகள், ‘பதவி கொடுத்த […]

எங்க ஏரியா உள்ளே வராதே…

2024 மக்களவைத் தேர்தல் நிறைய அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அதாவது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அவரவர் சொத்துக்களை காப்பாற்றவும், அவரை சேர்ந்தவர்கள் நல்வாழ்வுக்காகவுமே அரசியல் செய்கிறார்கள். அதற்காக ஆளுக்கொரு சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.ராமர் கோயிலையும் இந்துக்களின் காவி நிறத்தையும் காட்டி இந்தியா முழுவதையும் அப்படியே விழுங்கி, அதை அதானிக்கும் அம்பானிக்கும் கொடுப்பதற்கு பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றால், தமிழகத்தில் ஆரியத்தை எதிர்பதாக திராவிடத்தின் பெயரைச் சொல்லி குடும்ப அரசியல் கொடி கட்டி […]

நிறம் மாறும் தாமரை மோடி

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற டயலாக் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, நரேந்திர மோடிக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்திருக்கும் நரேந்திர மோடி, அவரது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். 2014 தேர்தலில் மோடியா லேடியா என்று கேட்டு தாமரையை தமிழ்நாட்டில் இருந்து ஓட வைத்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா என்பதை பிரதமர் மோடி மறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு அந்த கட்சியை […]

ஏழைகளுக்கான எம்.பி. கோட்டாவில் நிர்மலா சீதாராமன்

ஒரு நாட்டின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு தேர்தலில் நிற்பதற்கு பணம் இல்லை. அந்த அளவுக்கு நாட்டின் நிதிநிலைமை கேவலமாக இருக்கிறது என்று பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணம் இல்லை என்பதால் நிற்கவில்லை என்று பேசியதை அராஜகத்தின் உச்சம் என்றே கூற வேண்டும் மக்களவைத் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று நிருபர் கேட்கும்போது, ஏதேனும் காரணம் கூறியிருக்கலாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏனென்றால் தேர்தலில் நிற்பதற்கு டெபாசிட் பணம் மட்டும் கட்டினாலே போதும். […]