News

Follow Us

மே 3ம் தேதி அனுசரிக்கப்படும் உலக பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான அதேசமயம் ஆக்கப்பூர்வமாக செயல்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகம் என்பது மிக முக்கியமான அமைப்பாகும். நவீன யுகத்தில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்த காலத்தில் ஊடகத்தின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாததாக, மாறியுள்ளது. எனவே, சுதந்திரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பத்திரிகையாளர்கள் செயல்படுவதற்கான களம் தற்போது அமைந்துள்ளது’ என்று கூறியிருந்தார். 

அதேபோன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,  ’தமிழ்நாட்டை பொறுத்தவரை பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் பேணப்படுகிறது. 2021ல் திமுக அரசு பொறுப்பேற்ற வேளையில் உலகம் முழுதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக் காலத்தில் தமிழ்நாட்டில் செய்தி சேகரிப்பதில் அச்சமின்றி இரவும் பகலும் பாடுபட்ட செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டன’ என்று கூறி தமிழக அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளைக் குறிப்பிட்டிருந்தார்.

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போன்று இரண்டு அரசுகளும் பத்திரிகையாளர்களையும் மீடியாக்களின் குரல்வளையையும் நெரிக்கின்றன என்பது தான் உண்மை. சவுக்கு சங்கர் மட்டுமின்றி அவரது கூட்டாளிகளும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். எந்த அரசிலும் பத்திரிகை சுதந்திரம் கிடையாது என்பது தான் உண்மை. நல்லாத் தான் நடிக்கிறாங்கப்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link