News

Follow Us

ஒரு நாட்டின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு தேர்தலில் நிற்பதற்கு பணம் இல்லை. அந்த அளவுக்கு நாட்டின் நிதிநிலைமை கேவலமாக இருக்கிறது என்று பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணம் இல்லை என்பதால் நிற்கவில்லை என்று பேசியதை அராஜகத்தின் உச்சம் என்றே கூற வேண்டும்

மக்களவைத் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று நிருபர் கேட்கும்போது, ஏதேனும் காரணம் கூறியிருக்கலாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏனென்றால் தேர்தலில் நிற்பதற்கு டெபாசிட் பணம் மட்டும் கட்டினாலே போதும். மற்ற செலவுகள் எதுவுமே கட்டாயம் அல்ல.

ஆனால், நிர்மலா சீதாராமன் டெபாசிட் கட்டுவதற்கே பணம் இல்லாதவர் போன்று, ‘என்னிடம் தேர்தலில் நிற்பதற்கு பணம் இல்லை, அதனால் நிற்கவில்லை’ என்று தெனாவெட்டாக பதில் கூறியிருக்கிறார். இது தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரையும் அவமானபப்டுத்தும் செயல். ஒரு நாட்டின் பிரதமர் தேர்தலில் நிற்கும்போது இவர் மட்டும் ஏழைகளுக்கான கோட்டா என்ற கணக்கில் ராஜ்யசபாவில் உறுப்பினராகி அமைச்சராகத் தொடர்வாராம்.

தன்னுடைய உடல் மொழியாலும், அராஜகப் பேச்சாலும் பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் வெறுப்பு தோன்றுவதற்கு நிர்மலா சீதாராமன் முக்கிய  காரணமாக இருக்கிறார் என்பது மட்டும் நிஜம். மக்களைப் பற்றியும் ஏழ்மை பற்றியும் எதுவும் தெரியாத நிர்மலா சீதாராமன் கையில் நிதியமைச்சர் பதவி என்பது குரங்கு கையில் பூ மாலைக்கு சமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link