News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

98வது பிறந்தநாள் கொண்டாடும் ஆர்.எம்.வீரப்பன்! நேரில் வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரான ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். ஜி20 மாநாட்டை தொடர்ந்து நடைபெற உள்ள விருந்தில் பங்கேற்க குடியரசுத் தலைவர் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணமானார். அதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பனை அவரது இல்லத்தில் சென்று நேரில் சந்தித்தார். ஆர்.எம்.வீரப்பனின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் […]

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுதாக்கல் செய்ய அனுமதி!

ஜாமீன் மனு தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை கடந்த மாதம் ஆகஸ்டு 12ம் தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதன் பின்னர் இந்த வழக்கு […]

சென்னை, நீலகிரி கலெக்டர்கள் அதிரடி மாற்றம்! முக்கிய பின்னணி!

சென்னை மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிய கலெக்டராக ரஷ்மி சித்தாரத் ஜகடே நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அருணா தற்போது நீலகிரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் ரஷ்மி சித்தார ஜகடே, சென்னை மாவட்ட புதிய கலெக்டராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஹனீஷ் சாப்ரா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் […]

போலீசாரை தாக்கி தப்பித்த கொலையாளி! சுட்டுப்பிடித்த பெண் போலீஸ் அதிகாரி!

போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்த கொலையாளியை பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த துணிகர சம்பவம் பல்லடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 3ம் தேதி கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது வீட்டின் அருகே வெங்கடேஷ்,     செல்லமுத்து, விஷால் என்கிற சோனை முத்தையா ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர்.  இது குறித்து நடந்த வாக்குவாதத்தின் போது, மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா […]

விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல்

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி. மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி. மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே. குருசாமி மீது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் விகே. குருசாமி (திமுக), ராஜபாண்டி (அதிமுக) இருவரும் மாநகராட்சி […]

ஆழ்ந்த இரங்கல்கள் விஜய்!

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் மனஉறுதி மற்றும் விடாமுயற்சியுடன் ‘ஐ.பி.எஸ்.’ பட்டம் தொட்டவர். “எளிய மனிதன்  IPS ஆன கதை!” நான் எப்படி ஐ பி எஸ் ஆனேன் என்று விஜயகுமார் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய பேச்சை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்…. ”ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே போதும் என செட்டில் ஆகிவிடும் மன […]

செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரியதில் 5 கோடி ஊழல்?

முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட விருப்மேற்பார்வையில் நடந்த மக்கள் நலப்பணியிலே துணிந்து கையை வைத்த பொறியாளரை எப்படிய்யா இப்படி என்று ஆச்சயர்த்தில் உறைந்து போயுள்ளது பொதுப்பணி துறை பொறியாளர்கள் . சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். கடந்த 2015 […]

மாமா வேலை பார்க்க சொன்னாரா ஐஏஎஸ் அதிகாரி ? கொந்தளிக்கும் அரசுப் பொறியாளர்கள்!

வார இறுதியில் உல்லாச விடுதியில் உற்சாகமாக இருக்க கால்கேள் பெண்களை சப்ளை செய்யச் சொல்வதாக சீனியர் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் மீது பகீர் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள சம்பவம் கோட்டை வட்டாரத்தை சலசலப்பை உண்டாக்கியுள்ளது.பொதுப்பணித் துறையில் நீர்வளத்துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் மீது படுக்கைக்கு சேவை செய்ய பெண்களை அனுப்பச் சொல்லி வற்புறுத்துவதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய மூத்த பொறியாளர் ஒருவர் குட்டி முதல் புட்டி வரை ஏற்பாடு […]

“கார்ப்பரேட் கம்பெனியாகும் கார்ப்பரேசன்கள்”? 35ஆயிரம் போஸ்டிங் ஸ்வாகா! அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த திமுக அரசு ?

தமிழக அரசின் உள்ளாட்சி துறையின் கீழ் வரும் நகராட்சி மாநகராட்சி பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பும் வேலையை திமுக அரசு செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அரசு ஊழியர் ஒருவர் ” இதோ வருது, இதோ வருது என்று எதிர்பார்த்திருந்த 20 மாநகராட்சி பணியிடங்களுக்கான அளவுகோல் அரசானையாக அரசானை 152 நாள் 20-10-2022 வந்துள்ளது. சில குறிப்பிட்ட நல்ல அம்சங்கள் உள்ள போதிலும்,  ஒட்டு மொத்த மாநகராட்சியையும் தனியாரிடம் கொடுப்பது என்ற […]