சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்திய போலீஸ்… பாஜக அராஜகம்

நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தியிருக்கிறது ஆளும் பாஜக அரசு. 20 நாட்களாக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து பேசுபவர்கள், ‘’நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள் மூலமும், அராஜகக் கைதுகள் மூலமும் நசுக்கப் […]
நேற்று சங்கர் இன்று களஞ்சியம். சீமான் கூடாரத்தை காலியாக்கும் விஜய்

விஜய் அரசியலுக்கு வந்த நேரத்தில் தம்பி என்று பாசமாக அழைத்தார். அவர் கூட்டணிக்கு வரவில்லை என்றதும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த தேர்தலில் வழக்கம்போல் ஒரு இடத்திலும் ஜெயிக்காமல் நாம் தமிழர் வாஷ் அவுட் ஆனது. அதிமுகவில் இருந்து ஆட்களைப் பிடித்துவரும் விஜய் இப்போது சீமான் கட்சி நிர்வாகிகளையும் இழுக்கத் தொடங்கியிருக்கிறார். விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலாளர் சி.சங்கரை சீமான் கடுமையாக திட்டியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் […]
சிலுவையுடன் விஜய்..? இதுதான் சமத்துவமா முதல்வரே..?

முதல்வர் விஜய் எப்போதும் அருகில் ஒரு சிலுவை வைத்திருக்கிறார். ஜோசப் விஜய் என்பதால் அவர் சிலுவை வைத்திருக்கிறார். ஆனால், ஒரு முதல்வர் இப்படி வெளிப்படையாக சிலுவை வைத்திருக்கலாமா என்று திமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து பேசுபவர்கள், ‘’அரசு அலுவலகங்களில் விதிகளை முதல்வர் விஜய் உள்பட அனைவரும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் கிருஸ்தவராக இருக்கலாம். அவரை சர்ச்சுக்கு செல்லலாம். அது அவரது தனிப்பட்ட அடிப்படை உரிமை. ஆனால் அரசு அலுவலகத்தில் மதம் சார்ந்த […]
செளமியாவுக்கு அமைச்சர் பதவி.? ஓவர் ஜால்ரா அன்புமணி

நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி, இன்று அளவுக்கு மீறி விஜய்க்கு ஜால்ரா போட்டுள்ளார். இதையொட்டி, செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று அன்புமணி, ‘’தி.மு.க ஆட்சியில் 5 வருடம் சென்னையை நாசப்படுத்திட்டாங்க.. அதுக்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒரு ஆள் தான் காரணம்.. அதனால் இன்று அனுபவிக்கிறார்கள்.. அவர் என்ன பெரிய ஆளுமை மிக்கவரா..? மேயர் பதவி எவ்வளவு அதிகாரமிக்க பதவி.. ஆனால் பிரியாவை […]
ஃபாரின் சரக்கு, ரெஸ்டோ பார்…. விஜய் சூப்பர் மாற்றம்

டாஸ்மாக்கில் 54 புத்தம் புதிய சரக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் உணவுடன் கூடிய ரெஸ்டோ பார் திறக்கும் புத்தம் புதிய மாற்றத்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன. மாற்றம், மாற்றம் என்று சொன்னது இதைத்தானா என்று கொதிக்கிறார்கள். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ‘ரெஸ்டோ பார்’ எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதித்து வருவாயை […]
மேகாலயா பிராஜெக்ட்…? பத்திரிகையாளர் விஜயனை மிரட்டும் விஜய்

Meghalaya project…? Vijay threatens journalist Vijayan.
பழனி 100 கோடி மோசடிக்கு சிபிஐ விசாரணை..? ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்

பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை மாநில சிபிசிஐடி விசாரிப்பது நியாயமான பதிலைத் தராது, இதில் நேர்மையான விசாரணை நடைபெற சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பழனி முருகன் கோவிலுக்கு […]
ரீல்ஸ் அலப்பறைக்கு விஜய் தடை..? 40 நிமிடத்தில் முடிந்த அமைச்சரவைக் கூட்டம்

பள்ளிகளில் உள்ளே சென்று ரிலீஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை செய்யக்கூடாது, துறைகளில் ஊழல் முறைகேடுகள் இருக்கக் கூடாது, ஊழல் முறைகேடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் விஜய் தலைமயில் நடைபெற்ற இரண்டாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை செய்திருக்கிறார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ‘’ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். […]
விஜய் ஆட்சியில் பந்தாட்டம். நியமனம், டிரான்ஸ்ஃபர் பட்டியல்

நேற்றைய ஒரு நாள் மட்டும் தமிழக அரசு நிர்வாகத்தில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்புக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இந்த வகையில் சாய்குமார் 2027 பிப்ரவரி 28ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். அதேபோன்று, 35 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவம் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே. பனீந்திர ரெட்டி தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். […]
அம்பேத்கர் இங்கே… திருமாவளவன் எங்கே..?

சேலம் மாவட்டம்,கெங்கவல்லி பகுதியில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தபிறகும், காவல்துறை அதை நிராகரித்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, எட்டுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு செல்போனில் ஆறுதல் கூறிவிட்டு காணாமல் போய்விட்டார் திருமா என்று விசிகவில் புகைச்சல். சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் கிராமம் ஆதிதிராவிடர் நத்தம் புல எண்.374/1-க்குட்பட்ட நிலத்தில் பீடத்துடன் 20 ஆதி உயரத்தில் அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிம்மாசனம் போன்ற இருக்கையில் கால் மேல் கால் […]

