News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி, இன்று அளவுக்கு மீறி விஜய்க்கு ஜால்ரா போட்டுள்ளார். இதையொட்டி, செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று அன்புமணி, ‘’தி.மு.க ஆட்சியில் 5 வருடம் சென்னையை நாசப்படுத்திட்டாங்க.. அதுக்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒரு ஆள் தான் காரணம்.. அதனால் இன்று அனுபவிக்கிறார்கள்.. அவர் என்ன பெரிய ஆளுமை மிக்கவரா..? மேயர் பதவி எவ்வளவு அதிகாரமிக்க பதவி.. ஆனால் பிரியாவை செயல்படவே விடவில்லை.. காரில் தொங்கிங்கொண்டு என்ன கலாச்சாரம் இதெல்லாம்.. இதை எதையும் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.

பலமுறை சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கோரிக்கை வைத்தோம். 45 ஆண்டுகளில் எந்த முதலமைச்சருக்கும் இல்லாத தைரியம். முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்த 1 மாதத்தில் தைரியமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரைக்கும் ஒரு மேம்பாலம். அந்த மேம்பாலம் 14 கிலோமீட்டர் நீளம். அதை 1,400 கோடியில் அமைக்க முடியும். ஆனால், அந்தத் திட்டத்தின் மதிப்பீட்டை 2,100 கோடியாக உயர்த்தினார்கள். அது மிகப்பெரிய ஊழல். இப்போது ஆட்சி மாற்றம் வந்ததால் அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். வருங்கால அரசியலில் விஜய் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருக்கப் போகிறது.

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், பயமின்றி மக்களின் பிரச்னைகளை நடுநிலையோடு வெளியிட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத ஒரு சுதந்திரமான சூழல் தற்போது நிலவுகிறது. ஊடகங்கள் தைரியமாகச் செயல்படுகின்றன. இத்தகைய கருத்துக்களைக் கூறுவதால் ஆளுங்கட்சியுடன் கூட்டணி அல்லது நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாகப் பொருளாகாது’’ என்று அளவுக்கு மீறி ஜால்ரா போட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கையில் தமிழகத்தில் தன்னுடைய மனைவி செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கேட்டுள்ளார் என்பது தெரிகிறது. சிறுத்தைகளுக்கு செக் வைப்பதற்கு விஜய் கட்சியினர் அன்புமணியிடம் அளவுக்கு மீறி நெருக்கம் காட்டுகின்றனர்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள், ‘’முன்னொரு காலத்துல மானமுள்ள அன்புமணி ஒருத்தர் இருந்ததார். சமூக அக்கறையோட விஜய் படத்தில் சிகரெட் பிடிக்க கூடாது என்று போராட்டம் செய்தார். படத்தை ரீலிஸ் பண்ண விடமாட்டேன்னு மிரட்டுனார்.  ஆனா இன்னைக்கு இப்படியும் ஒரு பொழப்பு பொழக்கனுமானு பொழச்சிட்டு இருக்கிறார் சூட்கேஸ் மணி’’ என்று குமுறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link