News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

டாஸ்மாக்கில் 54 புத்தம் புதிய சரக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் உணவுடன் கூடிய ரெஸ்டோ பார் திறக்கும் புத்தம் புதிய மாற்றத்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன. மாற்றம், மாற்றம் என்று சொன்னது இதைத்தானா என்று கொதிக்கிறார்கள்.

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ‘ரெஸ்டோ பார்’ எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதித்து வருவாயை அதிகரிப்பதற்காக இந்த வகை மதுபானக் கூடத்திற்கு அனுமதி வழங்குவதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையான நிலையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில், “உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ – பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

விற்பனையை குறைத்து மது அருந்தக் கூடியவர்களை வேறு வழிக்கு மாற்றி அவர்களை போதையின் பாதையில் இருந்து மீட்க முயற்சிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை. ஆனால் எந்தெந்த வழிகளில் எல்லாம் வருவாயை பெருக்கலாம் என்று திட்டமிடுவது மக்களுக்கு நன்மையா அல்லது இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link