News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

சேலம் மாவட்டம்,கெங்கவல்லி பகுதியில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தபிறகும், காவல்துறை அதை நிராகரித்து  வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, எட்டுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு செல்போனில் ஆறுதல் கூறிவிட்டு காணாமல் போய்விட்டார் திருமா என்று விசிகவில் புகைச்சல்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் கிராமம் ஆதிதிராவிடர் நத்தம் புல எண்.374/1-க்குட்பட்ட நிலத்தில் பீடத்துடன் 20 ஆதி உயரத்தில் அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிம்மாசனம் போன்ற இருக்கையில் கால் மேல் கால் போட்டு அம்பேத்கார் அமர்ந்திருப்பது போன்ற இந்த சிலையை திறப்பதில் நீண்ட நாட்களாக பிரச்னை நிலவி வருகிறது.  இது சம்பந்தமாக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசுவை சந்தித்து மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதன் அடிப்படையில் 19-06-2026 தேதியிட்ட கடிதம் ஒன்றை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர் மோகன் ராஜா என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சட்டத்திற்குட்பட்டு சிலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் எழுதுகிறார்.

ஆனாலும் எந்த சிலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்கின்றனர். அந்த மனு நேரடியாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்கிறது. அதன் அடிப்படையில், 10-07-2026 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சிலை திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்து மனு கொடுத்தவர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசுகின்றனர். அதிகாலையில் அனைவரும் நன்றாக உறங்கும் தருணத்தில் நீங்களே சிலையை மறைத்து அமைக்கப்பட்டுள்ள தகரத்தை அகற்றிக்கொள்ளுங்கள். பிரச்னை ஏதும் வந்தால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

அதிகாரிகளே சிலையை மறைத்திருந்த தகரத்தை அகற்ற அறிவுறுத்தியதால் அந்த பகுதி மக்கள் 11-07-2026 அன்று அதிகாலை 5 மணியளவில் தகரத்தை அகற்றுகின்றனர் ஆனால், விடிந்ததற்கு பிறகு மூடியிருந்த சிலை திறக்கப்பட்டது தொடர்பாக போலீஸ் மற்றும் வருவாய்துறைக்கு தகவல் செல்கிறது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வருகின்றனர்.மீண்டும் சிலை வெளியே தெரியாதவாறு 20 அடிக்கு தகரம் அடித்து மறைத்து விடுகின்றனர்.

நீங்கள் தானே திறக்க சொன்னீர்கள்.. இப்போது ஏன் மீண்டும் மூடுகிறீர்கள் என மக்கள் வாக்கு வாதம் செய்து, கோஷம் எழுப்பி போராடுகின்றனர்.. பிரச்னையை சமாளிக்க காவல்துறையினர் அங்கு குவிக்கப்படுகின்றனர்

ஒரு கட்டத்தில் மக்களை சமாதானப்படுத்த முடியாத காரணத்தால் போலீசார் மக்களை விரட்டியடிக்க தொடங்குகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மிரட்டுகின்றனர்போலீசாரை கொலை செய்யும் நோக்கத்தோடு மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பெண் தலைமை காவலர் ஒருவர் மூலமாக புகாரை எட்டுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு பொங்கியெழ வேண்டிய திருமா அங்கே போவாரா அல்லது சோபாவை பாதுகாப்பாரா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link