Share via:
முதல்வர் விஜய் எப்போதும் அருகில் ஒரு சிலுவை வைத்திருக்கிறார்.
ஜோசப் விஜய் என்பதால் அவர் சிலுவை வைத்திருக்கிறார். ஆனால், ஒரு முதல்வர் இப்படி வெளிப்படையாக
சிலுவை வைத்திருக்கலாமா என்று திமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இது குறித்து பேசுபவர்கள், ‘’அரசு அலுவலகங்களில் விதிகளை முதல்வர்
விஜய் உள்பட அனைவரும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் கிருஸ்தவராக
இருக்கலாம். அவரை சர்ச்சுக்கு செல்லலாம். அது அவரது தனிப்பட்ட அடிப்படை உரிமை. ஆனால்
அரசு அலுவலகத்தில் மதம் சார்ந்த குறியீடுகளோ, சுவாமி புகைப்படங்கள் இருப்பதோ தவிர்க்கப்பட
வேண்டும்.
அரசு விதிகளின்படி குறிப்பிட்ட எந்த ஒருமத் கடவுள்களின் படத்தை
அரசு ஊழியர் அலுவலகத்தில் வைத்திருக்கக் கூடாது. விதிகளைப் பின்பற்ற வேண்டிய முதல்வரே
இதுபோன்று நடப்பது தான் வேதனையின் உச்சம். சமூகநீதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை
கடைப்பிடிக்க வேண்டியது முதல்வர் விஜய் பணி. இனி இது போன்ற அடையாளங்களை முதல்வர் தவிர்க்க
வேண்டும்’’ என்கிறார்கள்.
ஆனால் தவெகவினரோ, ‘’’உத்தரப்பிரதேசத்தில் காவி உடையுடன் ஒரு முதல்வர்
இருக்கிறார். பிரதமர் அலுவலகமே கோயிலாக காட்சியளிக்கிறது. இதையெல்லாம் எதிர்க்க முடியாமல்
எங்கள் தலைவரைப் பற்றி பேசலாமா?’’ என்று கொதிக்கிறார்கள்.
பெரியார் கொள்கைத் தலைவர் என்றாலும் கடவுள் மறுப்புக் கொள்கையில்
உடன்பாடு இல்லை என்று சொன்ன விஜய், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?