Share via:
பள்ளிகளில் உள்ளே சென்று ரிலீஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை செய்யக்கூடாது,
துறைகளில் ஊழல் முறைகேடுகள் இருக்கக் கூடாது, ஊழல் முறைகேடுகள் இருந்தால் கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும் விஜய் தலைமயில் நடைபெற்ற இரண்டாவது அமைச்சரவை கூட்டத்தில்
அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இரண்டாவது அமைச்சரவை கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய்,
‘’ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை
செய்திருக்கிறார்.
தன்னுடைய தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க
வேண்டும். தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாவர்கள் என யாரையும் பார்க்கமாட்டேன்,
உடனடி நடவடிக்கை எடுத்துவிடுவேன் என்று கூறியதுடன், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு
ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
மாதம் 2,500 ரூபாய், கேஸ் சிலிண்டர் போன்றவற்றில் முக்கிய முடிவு
எடுக்கப்படும் என்று அனைவரும் காத்திருந்த நேரத்தில் ரீல்ஸ் விவகாரத்துடன் மீட்டிங்கை
முடித்திருக்கிறார் விஜய்.
ரீல்ஸால் வந்த ஆட்சியில் இனி ரீல்ஸ் போட முடியாதா என்று அமைச்சர்கள்
கலங்கி நிற்கிறார்கள். அதேநேரம் திமுகவினரோ, ‘’லாக்கப் டெத்தில் இறந்து போனவனின் குடும்பம்
உடலை வாங்க மாட்டேன் என்று கதறிட்டு இருக்கிறது. என் பொண்ணை ரெண்டு நாளா காணோம் ஒருத்தன்
மேல சந்தேகமா இருக்கு ஏதாவது பண்ணுங்கனு போலீஸ் ஸ்டேஷன் சிங்கப்பெண் அதிரடிப்படை ரெண்டுலயும்
கம்ப்ளெய்ன்ட் கொடுத்து எதுவும் நடக்கவில்லை என்று ஒரு அம்மா போலீஸ் ஸ்டேஷன் முன் நடுரோட்டுல
உருண்டு பொரண்டு கதறிக்கொண்டு இருக்கிறார். ஆனால், ரீல்ஸ் பற்றி பேசி மீடியாவை திசை
திருப்புகிறார்’’ என்று கடுப்பாகிறார்கள்.