ஜனநாயகன் திருவிழா… பிளாக்ல வாங்காதீங்கன்னு சொன்னாரா விஜய்?

விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் ஆகிவிட்டது. ஒரு அமைச்சர் படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்துகிறார். இரண்டு அமைச்சர்கள் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுத்து மகிழ்கிறார்கள். ஒரு அமைச்சர் விஜய் ஃப்ளக்ஸைத் தடவிக்கொடுத்து ரசிக்கிறார். இது குறித்து பேசுபவர்கள், ‘’’’இன்று தமிழ் நாடு முழுக்க தியேட்டர்களில் ஜனநாயகன் படம் பிளாக்ல டிக்கெட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. இது, ஊழல் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. சும்மா மைக்கை புடிச்சுகிட்டு லஞ்சம் கேட்டால் கொடுக்காதீங்க இல்லைன்னா என் கிட்ட […]
டெல்லியில் காவிரிக்கு திமுக போராட்டம்..? கண்ணீரில் விவசாயிகள்

காவிரி தண்ணீருக்கும் மேகதாது அணைக்கும் நியாயம் கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக விவாதிக்க அனுமதி கேட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படி மற்றும் காவிரி நதி நீர் ஒப்பந்தங்களின்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகப் பெற்றுத் தர, தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி தண்ணீர் பகீர்மானத்தில் கர்நாடகா அரசு சென்ற ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. திறந்திருக்க வேண்டும். ஆனால் சென்ற மாதம் தமிழகத்திற்கு கிடைத்தது 2.92 டி.எம்.சி. மட்டுமே. கொடுக்க வேண்டிய சுமார் 68% […]
ஜனநாயகன் டிக்கெட் 800 ரூபாய்..? விஜய்க்குப் போகிறதா கூடுதல் பணம்?

பாட்டிலுக்குப் பத்து ரூபாய் என்று கடந்த ஆட்சியில் திமுகவை கிண்டல் செய்த விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுகுறித்துப் பேசும் திமுகவினர், ‘’விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் நாளை ரிலீஸாகவிருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தமிழகத்தில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்பனை செய்யவே கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், தியேட்டரிலேயே 500 […]
ரத்தக் காயங்களுடன் ராகுல் காந்தி கைது. ஸ்டாலின் கூட்டத்திற்கு குஷி

கரப்பான் பூச்சி இயக்கத்துக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி போலீஸ் அடாவடியாக கைது செய்திருக்கிறது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றுகூடிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஒன்று கூடினார்கள். அதன்பிறகு மாணவர்களின் போராட்டம் பிரச்சினையில் பிரதமரைத் தட்டி […]
பட்ஜெட்டுக்கு நாள் குறிச்சாச்சு. மக்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்பதை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார். இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் பல்வேறு துறை அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தொடர் ஆலோசனை நடத்திவருகிறார். பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய […]
டெல்லியில் கரப்பான் பூச்சிகளை நசுக்கிய போலீஸ்… விஜய்ண்ணா ரொம்ப க்யூட்

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது பாஜக அரசு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஜய் வாயைத் திறக்கவே இல்லை. தவெகவின் ஐ.டி. விங் இந்த அராஜகத்தை, ‘’கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்…’ என்று மயிலிறகால் தடவிக்கொடுத்துள்ளது. அதாவது பாஜகவுக்கு ஆதரவாக பல்லக்கு தூக்கியிருக்கிறது. நேற்றைய […]
ராஜேஷ் லக்கானிக்கு விஜய் அழைப்பு..? என்ன பதவி..?

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ். இவர் கடந்த ஆட்சி காலத்தில் மத்திய அரசு பணிக்கு சென்றார். கடையாக நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக செயல்பட்டு வந்தார். இவருக்கு விஜய் சார்பில் மாநிலத்துக்குத் திரும்பும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மாநிலப் பணிக்குத் திரும்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ஏசிசி) ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவர் தமிழக பணிக்கு […]
’எலும்பு’ எம்.எல்.ஏ. கைது. ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை

லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னைக்குத் திரும்பிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை தரும் விதமாக, ‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’ என்று முதல்வர் விஜய் பற்றி பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS 351(3) – கடுமையான குற்ற மிரட்டல் (Criminal Intimidation): BNS 352 – அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் (Intentional insult […]
வைகோ விழாவில் ராகுல், விஜய்..? புதிய கூட்டணி உதயம்
அமைச்சர் ரமேஷ் பதவி விலகுவாரா..? போட்டுத்தாக்கும் திமுக மூர்த்தி

பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடு வழக்கில், நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது […]

