News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மகளிர் அணி நிர்வாகிகள் காலில் விழுந்த பிரதமர் மோடி! நன்றி தெரிவிக்கும் விழா!

டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதமர் மோடி தனக்கு நன்றி தெரிவித்து காலில் விழுந்த பெண்களின் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி டெல்லியில் பா.ஜ.க […]

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட தமன்னா குஷ்பு!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தமன்னா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் பார்வையிட்டு மெய்சிலிர்த்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் அலுவல்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் அடுத்தடுத்த நாள் சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற […]

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர்! ஒரு நாள் முன்னதாக முடிவு!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அன்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் மகளிர் 33% இட […]

ராஜ்யசபாவை வழிநடத்திய தி.மு.க. எம்.பி.கனிமொழி சோமு! வரலாற்று சிறப்பு!

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் மாநிலங்களவையின் மாற்றுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு அவையை வழிநடத்தியது தமிழகத்தின் பெருமையை பறைசாற்றியுள்ளது.   மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா என்ற பெருமை பெற்றது. செப்.21ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா […]

சாலையில் சர்வசாதாரணமாக நடமாடும் கரடி! திருப்பதியில் தொடரும் அச்சம்!

திருப்பதி நடைபாதையில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து தற்போது கரடியும் சர்வ சாதாரணமாக வலம் வருவதால் பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சிறுவன் சிறுத்தையால் தாக்கப்பட்டு வனப்பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டான். அதைத்தொடர்ந்து 6 வயது சிறுமி சிறுத்தையால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த தொடர் சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் அலிபிரி நடைபாதையில் கரடி ஒன்று 7-வது மைலில் […]

ராமோஜி பிலிம்சிட்டியில் உலகக்கோப்பை டிராபி! கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

ஐதராபாத்தில் உள்ள ராமேஜி பிலிம்சிட்டியில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. […]

குடியரசுத் தலைவரை விட்டுவிட்டு நடிகைக்கு அழைப்பு ஏன்? அமைச்சர் உதயநிதி கேள்வி!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நடிகைகள் அழைக்கப்பட்ட  நிலையில் ஏன் ஜனாதிபதியை மட்டும் அழைக்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதைப் பற்றி பேசினாலும் அது டிரெண்டிங்காகிவிடுகிறது. எந்த அச்சமும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் முன்வைக்கும் கருத்துக்களும், குற்றச்சாட்டுகளும் இந்தியா முழுவதும் பேச்சுப் பொருளாக மாறி வருகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

கனடாவில் இந்தியர்களுக்கு அச்சறுத்தல்! மேலும் ஒரு காலிஸ்தான் திவிரவாதி சுட்டுக்கொலை!

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று கனடா நாட்டில் குடியேறிய காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இக்கொலயில் இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான தூதரக அதிகாரியையும் கனடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு […]

ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி! ரூ.25 கோடி வென்ற தமிழர்!

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட லாட்டரியில் ரூ.25 கோடி பரிசுத் தொகையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில அரசு, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளின் போது லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரூ.1 கோடி, ரூ.10 கோடி, ரூ.25 கோடி என பம்பர் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு லாட்டரி […]

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்! புதிய நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு!

புதிய நாடாளுமன்ற மக்களவையில் ஒரு மனதாக மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறி புதிய வரலாற்றை படைத்துள்ளது. நாரி சக்தி வந்தன் அதிநியம் என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா வரலாற்றில் முக்கியம் இடம் பிடித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் சட்ட மசோதா என்ற பெருமையை பெற்ற மகளிர் 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக முழு ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா […]