News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் திடீர் மாற்றம்! முக்கிய பின்னணி!

புதுச்சேரியின் புதிய பா.ஜ.க. தலைவராக செல்வகணபதி எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.   யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சாமிநாதன் பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சாமிநாதன் தற்போது மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.பி.செல்வகணபதி புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா வெளியிட்டுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக […]

திருப்பதியில் பக்தி மணம்! ஸ்ரீவாரி சாலகட்லா பிரம்மோற்சவம்!

திருப்பதி பிரம்மோற்சவம் கடந்த செப்.18ம் தேதி தொடங்கிய நிலையில் 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமலை திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் படைக்கும் கடவுளான பிரம்மதேவனை அழைத்து உலகநன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த உத்தரவிட்டதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்ற பிரம்ம தேவன், புரட்டாசி மாதத்தில் திருவோணநட்சத்திரம் அன்று நிறைவு பெறும் வகையில் தொடர்ந்து 9 நாட்கள்  […]

இரண்டாக உடைந்த ஆற்றுப்பாலம்! குஜராத்தில் என்ன நடந்தது?

ஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பைக் மற்றும் லாரியில் சென்ற 10 பேர் துரிதமாக மீட்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. குஜராத் மாநிலம் சுரேந்திரநாத் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் 40 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஆற்றுப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று மாலையும் இந்த பாலத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாலம் இடிந்து […]

உத்தரகாண்டில் அதிகாலையில் நிலநடுக்கம்! தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்!

வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உணரப்பட்டதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். வங்கக்கடலில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கண்டறியப்பட்ட நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி என்ற பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக மத்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமான தனது […]

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடருமா? இன்று முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!

பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிக்க உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஜெயக்குமார் மட்டும் கொதித்தெழுந்து இனி […]

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

நேற்று முன்தினம் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கம், வெண்கலம், வெள்ளி என பதக்கங்களை குவித்து வருகிறது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில் இந்தியா தனது வெற்றிக்கொடியை நாட்டும் என்பதற்கு அடித்தளமாக 2வது நாளான நேற்று 5 பதக்கங்களை கைப்பற்றியது. அதன்படி இந்தியவுக்கான முதலாவது பதக்கம் துப்பாக்கி சுடுதல் […]

தமிழகம் வரும் சோனியா காந்தி! நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பின்னணி!

நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி அழைப்பை ஏற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழகம் வருகிறார். இது வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டிற்கான வருகையா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் […]

திருப்பதி பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கருட சேவை இன்று நடைபெற்று நிகழ்ச்சி படங்கள்

திருப்பதி பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கருட சேவை இன்று நடைபெற்று நிகழ்ச்சி படங்கள்  

உலகமே எதிர்பார்த்த நாள் இன்று! முக்கிய முயற்சியில் இஸ்ரோ!

நிலவின் தென்துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ உள்ளதால் உறக்கத்தில் இருக்கும் லேண்டரை மீண்டும் இயக்குவதில் இஸ்ரோ தனது முழு முயற்சியை மேற்கொண்டு வருவது உலகையே திரும்பி  பார்க்க வைத்துள்ளது. கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் […]

காவிரி விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! &அமைச்சர் துரைமுருகன்!

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றக் கொண்ட உச்சநீதிமன்றம் 5ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேரும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ளது. தமிழக அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி 5 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட […]