News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அக்கினேனி நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

இந்திய நடிகர் நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அக்கினேனி குடும்பத்தினர் மற்ற பிரபலங்கள் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் குவிந்ததால் அவ்விடமே விழாக்கோலம் பூண்டது. தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவர் அக்கினேனி நாகேஸ்வரராவ் 255க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2014ம் ஆண்டு காலமான நாகேஸ்வரராவின் மகன், அவரது மகன் என திரைத்துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் தென்னிந்திய நடிகர்களில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இக்குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து நாகேஸ்வரராவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு […]

இந்தியா கூட்டணியில் முதல் விரிசல்! பரபரப்பு பின்னணி!

இந்தியா கூட்டணியில் இருந்து சி.பி.எம். கட்சி திடீரென்று விலகியது அக்கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பா.ஜ.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஒரே நேர்கோட்டு எண்ணத்தில் உருவானதுதான் இந்தியா கூட்டணி. இக்கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரண்ட காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்திருந்தன. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2வது கூட்டம் கடந்த ஜூலை மாதம் […]

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்நபன திருமஞ்சனம்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது. சுவாமிகளின் அலங்காரத்திற்கு தேவையான மாலைகள், கிரீடம் மற்றும் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சள், உலர்மலர்களால் செய்யப்பட்ட மாலைகளை […]

காவிரி விவகாரம்! கர்நாடக முதலமைச்சர் எம்.பி.க்களுடன் டெல்லி பயணம்!

காவிரி விவாகரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி விவகாரம் எந்த தலைமுறையில்தான் விடிவுக்கு வரும் என்பது பொதுமக்களின் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் காவிரி நீர் குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுடெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி […]

நிபா வைரஸ் தொற்று இல்லை: கோழிக்கோட்டில் தளர்வுகள் அறிவிப்பு!

புதியதாக யாருக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்படாததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கேரள மாநிலம் கோழிக்கோடு  மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வந்தது. எனவே கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தஞ்சேரி, மருதோங்கரை, குட்டியடி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் வெளியே செல்வதையும், மற்றவர் உள்நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசியத் தேவைக்காக கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இடங்களில் தளர்வுகளை […]

புதிய கட்டிடத்தில் இன்று நாடாளுமன்ற கூட்டம்! இத்தனை தகவல்களா?

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று (செப்.18) சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இந்தியாவின் கடந்த 75 ஆண்டு கால ஜனநாயக வரலாறு குறித்து விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தங்கள் அலுவல்களை தொடங்கி செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று முதல் […]

கனடா தூதர் வெளியேற 5 நாட்கள் கெடு! கனடாவுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு!

அடுத்த 5 நாட்களுக்குள் கனடா தூதரக அதிகாரி இந்தியா¬ விட்டு வெளியேற வேண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜிப் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது  உலக அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து மூத்த அதிகாரியை வெளியேற்றி கனடா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது கனடா பிரதமர் […]

6 கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள்! தெலுங்கானாவில் காய் நகர்த்தும் காங்கிரஸ்!

தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான 6 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த ஆண்டு (2023) இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே வரப்போகும் எனவே பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ்,பா.ஜ.க. என மும்முனைப் போட்டியால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் 2வது கூட்டம் தெலுங்கானாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரங்கரெட்டி  மாவட்டம் […]

புதர், குகைகளில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகள்! காட்டிக் கொடுத்த டிரோன் கேமரா!

5வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை! காஷ்மீரில் தொடர்ந்து 5வது நாளாக டிரோன்கள் உதவியுடன் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை முழுவீச்சில் தேடி வருகின்றனர். காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வந்த போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டம் காடோல் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் […]

8வது முறையாக ஆசியக் கோப்பை: இந்தியாவின் பெருமை பட்டியல் இதோ!

16வது ஆசியக் கோப்பையை நேற்று (செப்.17) இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தட்டிச் சென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. அப்போது முதல் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்ததுதான். அதன் பின்னர் முகமது சிராஜ் தொடர்ந்து 6 விக்கெட்டுகளை மிகவும் குறுகிய இடைவெளியில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் ஹர்திக் […]