Share via:
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நடிகைகள் அழைக்கப்பட்ட நிலையில் ஏன் ஜனாதிபதியை மட்டும் அழைக்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதைப் பற்றி பேசினாலும் அது டிரெண்டிங்காகிவிடுகிறது. எந்த அச்சமும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் முன்வைக்கும் கருத்துக்களும், குற்றச்சாட்டுகளும் இந்தியா முழுவதும் பேச்சுப் பொருளாக மாறி வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு மாநாடு எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டை கூறலாம். ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சேலத்தில் வருகிற டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டை சொல்லலாம் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நேற்று கூட புதிய நாடாளுமன்ற விழாவில் ஜனாதிபதியை அழைக்கவில்லை. அதற்கு சம்பந்தமே இல்லாத இந்தி நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டி பேசினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி அழைப்புவிடுத்தார்.