News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அன்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது.

அடுத்தடுத்த நாட்களில் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை தொடர்ந்து இரு அவைகளிலும் இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறப்பு கூட்டத் தொடர் 5 நாட்கள்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களவை, மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா ஒரு மனதாக முழு ஆதரவுடன் நிறைவேறியுள்ளதால் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link