News

Follow Us

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் நடிகர் கருணாஸ், நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச்செயலாளர் எடப்பாடி உள்ளிட்ட 40 பேர் உள்ளனர். இதில் நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்கள் உள்ளன. சினிமா நட்சத்திர அதிமுக பிரச்சார பேச்சாளர்கள் வைகை செல்வன், நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலிகான்,  கவிஞர் முத்துலிங்கம், ரெங்கநாதன், வையாபுரி, அருள்மணி, கஞ்சா கருப்பு, மனோஜ் குமார், பாத்திமாபாபு, குண்டு கல்யாணம், அனுமோகன் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் ஒன்றினைந்து, பிரச்சாரம் தொடங்கினர்!

தமாகா பட்டியலில் ஜி.கே.வாசன், சுரேஷ், சக்தி வடிவேல், விடியல் சேகர், முனவர் பாஷா, ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட 20 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

பா.ஜ பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், யோகி ஆதித்யநாத் பெயர்களுடன் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், ராமதாஸ், அன்புமணி, தமிழருவி மணியன், எச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ராதிகாவுக்கு நான் பிரசாரம் செய்ய மாட்டேன் என்று குஷ்பு அடம் பிடித்துவருகிறாராம். நேற்று கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை கழட்டி விட்டீர்கள் என்று கோபம் காட்டி வருகிறாராம். எனவே குஷ்புவை சமாதானப்படுத்தும் முயற்சி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link