News

Follow Us

நடிகர் விஜயகுமார் குடும்பத்துல இருந்து பேரன் ஸ்ரீஹரி அதாங்க வனிதாவோட மகன் ஹீரோவாகுறார். இப்ப இன்னொரு பேரனான ஸ்ரீராமும் ஹீரோவாகி இருக்காரு அப்படிங்குறதுதான் ஹாட் டாப்பிக்கே.

கமர்ஷியல் ஹிட் படங்கள இயக்குறதுல கெட்டிக்காரரான ஹரி சாமி, சிங்கம் உள்ளிட்ட படங்கள தொடர்ந்து இப்ப விஷால் நடிப்புல ரத்னம் படத்த டைரக்ட் பண்ணிட்டு இருக்காரு. வர்ற 26ம் தேதி ரத்னம் இந்த படம் ரிலீசாகப் போகுது.

இந்த நிலையில ஹரி, பிரீத்தா விஜயகுமார் தம்பதியோட மூத்த மகன் மகன், ஸ்ரீராம் இப்ப (HUM) ஹூம் அப்படிங்குற படத்துல ஹீரோவாகியிருக்காரு. இருங்க மக்களே இந்த படத்தோட டைரக்டரும் இவர்தான். யூடியூப்ல ரிலீசாகுற இந்த படத்துல இவரோட சித்தியும், நடிகையுமான ஸ்ரீதேவியும் கேமியோ ரோல் பண்றாங்க.

அப்பா ஹரி மாதிரி ஆக்ஷன் படம் எடுப்பாருன்னு நினைச்சா, ஸ்ரீராம் திரில்லர் படத்த டைரக்ட் பண்ணியிருக்காரு. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்ப ரசிகர்கள் மத்தியில அதிகரிச்சிருக்கு. அப்பா மாதிரியே மகனும் டைரக்ஷன்ல கலக்குவாருன்னு கமெண்ட் பண்றாங்க ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link