News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் இடமாற்றம் செய்யப்படுள்ளனர். மின்சாரத் துறைக்கு ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதன்படி டாக்டர் கே. மணிவாசன், ஐ.ஏ.எஸ். – கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) பொறுப்பிலிருந்து நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.ஆர். கார்த்திக், ஐ.ஏ.எஸ். டான்சிட்கோ நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொறுப்பிலிருந்து உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வி. அருண் ராய், ஐ.ஏ.எஸ். – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட மின்சாரத் துறை நிறுவனங்களின் பொறுப்புகளிலிருந்து நிதித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  என். வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ். – நிதித்துறையிலிருந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – விவசாயிகள் நலத்துறைச் செயலாளராக நியமனம்.  ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ். – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link