News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

காவிரி விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! &அமைச்சர் துரைமுருகன்!

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றக் கொண்ட உச்சநீதிமன்றம் 5ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேரும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ளது. தமிழக அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி 5 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட […]

சபாநாயகர் அப்பாவு – அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! பின்னணி தகவல்கள்!

துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாபுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர். வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி சட்டசமன்ற கூட உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எல்.ஏ.க்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என்று […]

மகளிர் அணி நிர்வாகிகள் காலில் விழுந்த பிரதமர் மோடி! நன்றி தெரிவிக்கும் விழா!

டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதமர் மோடி தனக்கு நன்றி தெரிவித்து காலில் விழுந்த பெண்களின் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி டெல்லியில் பா.ஜ.க […]

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட தமன்னா குஷ்பு!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தமன்னா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் பார்வையிட்டு மெய்சிலிர்த்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் அலுவல்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் அடுத்தடுத்த நாள் சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற […]

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர்! ஒரு நாள் முன்னதாக முடிவு!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அன்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் மகளிர் 33% இட […]

ராஜ்யசபாவை வழிநடத்திய தி.மு.க. எம்.பி.கனிமொழி சோமு! வரலாற்று சிறப்பு!

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் மாநிலங்களவையின் மாற்றுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு அவையை வழிநடத்தியது தமிழகத்தின் பெருமையை பறைசாற்றியுள்ளது.   மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா என்ற பெருமை பெற்றது. செப்.21ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா […]

திருப்பதி பிரம்மோற்சவம்! கருட சேவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருக்குடைகள்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் கருட சேவையின் போது உற்சவமூர்த்திகளுக்கு அலங்காரம் செய்ய சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் போது சென்னையில் இருந்து புறப்படும் குடைகள் கருட […]

தங்க கற்பக விருட்ச வாகனத்தில் ஏழுமலையான்! திருப்பதி பிரம்மோற்சவ சிறப்பு புகைப்படங்கள்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதன்படி பிரம்மோற்சவத்தில் நான்காவது நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் கற்பக விருட்ச வாகன புறப்பாடு நடைபெற்றது. கோவில் மாட வீதிகளில் உலா வந்த சுவாமிகளை திரளான பக்தர்கள் திரண்டு […]

தமிழக ஆளுநர் மனைவியுடன் காஞ்சி சங்கரமடத்தில் சாமி தரிசனம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சாமி தரிசனம் செய்தார். காஞ்சீபுரத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் காஞ்சிகாமகோடி பீடத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தமிழ்நாடு நலன் வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டதற்கு பின்னர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் சிவபெருமானை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ […]

கனடாவுக்கான விசா சேவை நிறுத்தம்! இந்தியா அதிரடி!

இந்தியா- கனடா நாட்டுக்கு இடையேயான உறவில் விரிசல் எதிரொலியாக கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. கனடா நாட்டில் குடியுரிமையுடன் வசித்துவந்த காலிஸ்தான் தீவிரவாதி கடந்த ஜூன்மாதம் சுட்டுக் கொல்லப்பட்டான்.  இந்தியாவுக்கான தூதரக அதிகாரியையும் கனடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார். இந்த நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருந்த கனடா நாட்டு தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு 5 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஆணை பிறப்பித்தது. […]