News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

நேற்று முன்தினம் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கம், வெண்கலம், வெள்ளி என பதக்கங்களை குவித்து வருகிறது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில் இந்தியா தனது வெற்றிக்கொடியை நாட்டும் என்பதற்கு அடித்தளமாக 2வது நாளான நேற்று 5 பதக்கங்களை கைப்பற்றியது. அதன்படி இந்தியவுக்கான முதலாவது பதக்கம் துப்பாக்கி சுடுதல் […]

பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்! அரிய புகைப்படங்கள்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. கடந்த செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஆராதனை செய்யப்பட்டன. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில்  கரைக்க தேவையான அனைத்து பாதுகாப்பு பணிகளையும் சென்னை மாநகர காவல்துறை வெகு சிறப்பாக செய்திருந்தது. சென்னையில் […]

தமிழகம் வரும் சோனியா காந்தி! நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பின்னணி!

நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி அழைப்பை ஏற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழகம் வருகிறார். இது வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டிற்கான வருகையா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் […]

பொது சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை! டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி!

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வசிப்பிடங்களுக்கு மருத்துவக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். […]

திருப்பதி பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கருட சேவை இன்று நடைபெற்று நிகழ்ச்சி படங்கள்

திருப்பதி பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கருட சேவை இன்று நடைபெற்று நிகழ்ச்சி படங்கள்  

உலகமே எதிர்பார்த்த நாள் இன்று! முக்கிய முயற்சியில் இஸ்ரோ!

நிலவின் தென்துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ உள்ளதால் உறக்கத்தில் இருக்கும் லேண்டரை மீண்டும் இயக்குவதில் இஸ்ரோ தனது முழு முயற்சியை மேற்கொண்டு வருவது உலகையே திரும்பி  பார்க்க வைத்துள்ளது. கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் […]

மறைந்த ராமஜெயத்தின் 62வது பிறந்தநாள் இன்று! கொலை வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழகத்தையே உலுக்கிய அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் பிறந்தநாள் இன்று. அவரது மர்ம கொலை குறித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத ராமஜெயத்தின் கொலை வழக்கு கடந்த வந்த பாதை குறித்தும் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 2012ம் ஆண்டு திமுக முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். நடைபயிற்சி மேற்கொண்டிருந்த காலை நேரத்தில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட  நிலையில், அவரது உடல் திருவளர்சோலை அருகே கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை […]

சனாதன சர்ச்சை பேச்சு! அமைச்சர் உதயநிதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சனாதன சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றது. இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது என்றும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் சனாதனத்தை எதிர்த்து என் குரல் […]

காவிரி விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! &அமைச்சர் துரைமுருகன்!

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றக் கொண்ட உச்சநீதிமன்றம் 5ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேரும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ளது. தமிழக அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி 5 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட […]

சபாநாயகர் அப்பாவு – அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! பின்னணி தகவல்கள்!

துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாபுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர். வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி சட்டசமன்ற கூட உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எல்.ஏ.க்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என்று […]