News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தயாநிதி மாறனுக்கு திடீர் சிக்கல்..? மத்திய சென்னை நிலவரம்

மத்திய சென்னையில் வழக்கம்போல் தி.மு.க. வேட்பாளராக மாறன் நினைக்கிறார். இங்கு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி நிற்கிறார். இவர்கள் இருவரையும் விட பா.ஜ.க.வின் வேட்பாளர் வினோஜ் செல்வமே எகிறி எகிறி அடிக்கிறார். தயாநிதி மாறனுக்கு ஏதேனும் ஒரு வகையில் சிக்கல் உருவாக்கி தேர்தலை தள்ளிப்போட பா.ஜ.க. முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொகுதியில் முரசொலி மாறன் 1996, 1998, 1999 ஆகிய 3 தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தயாநிதி மாறன் 204, 2009 தேர்தல்களில் […]

சீமான் சின்னத்துக்கு விஜய் ஆதரவா? குஷியில் தம்பிகள்

கடந்த தேர்தலில் விஜய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஓட்டு போடுவதற்கு வந்ததை பார்த்த ரசிகர்கள், ‘பெட்ரோல் விலை ஏறுனதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற மாதிரி சைக்கிள்ல வந்திருக்கிறார், அதனால் இது தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு’ என்று குதித்தார்கள். அதே ரசிகர்கள் இப்போது நாம் தமிழரின் புதிய சின்னமான ஒலிவாங்கிக்கு விஜய் ஆதரவு கொடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அதை கேட்டு நாம் தமிழர் சீமானின் அன்புத் தம்பிகள் அத்தனை பேரும் ஆனந்தத்தில் இருக்கிறார்கள். விஜய்யின் புதிய படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் […]

அண்ணாமலைக்கு ரூல்ஸ் கிடையாதா… இரவு 10 மணி பஞ்சாயத்து

கோவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலை  காமாட்சிபுரத்தில் பிரச்சாரத்தை முடித்து விட்டு திருச்சி சாலைக்கு வந்த போது இரவு 10 மணியை கடந்திருந்தது. அதன் பிறகும் எனக்காக காத்திருக்கும் மக்களை சந்திக்கப் போகிறேன் என்று அடம் பிடித்து நடுரோட்டில் பிரச்னை செய்திருக்கிறார் அண்ணாமலை. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என்ற விதியை மீறி அண்ணாமலை பிரச்சார வாகனத்தில் கையசைத்தவாறு பயணித்தார். தேர்தல் விதியை மீறியும் அனுமதி பெறாமல் நூதன முறையிலும் அவர் […]

மோடியின் விசுவாசி பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் கதி என்ன..?

தலையாட்டி பொம்மை, எடுப்பார் கைப்பிள்ளை, அரசியல் ஜோக்கர் என்ற பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க. பேச்சைக் கேட்டு சசிகலாவை முறைத்துக்கொண்டதால் பதவி பறி போனது. அதன்பிறகு தர்மயுத்தம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியை பகைத்துக்கொண்டார். பின்னர் பா.ஜ.க. பஞ்சாயத்தில் கட்சிக்குள் புகுந்துவிட்டாலும், அ.தி.மு.க.வில் நிலைத்துநிற்க முடியாமல் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகு தினகரன் ஒரு கட்சியைத் தொடங்கியது போல் எதுவும் செய்ய முடியாமல் அ.தி.மு.க.வை மீட்பேன் என்று முயற்சி செய்து, அத்தனையும் […]

மோடியின் தேர்தல் அறிக்கை… 1 ரூபாய்க்கு நாப்கின்… பொதுசிவில் சிட்டம் உறுதி.

தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களில் தேர்தல் முடிவுக்கு வரும் நிலையில், பா.ஜ.க. தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. புதுடெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த நாடும் இந்த ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயர் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து […]

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்… பெட்ரோல் விலை உயரும்… மூன்றாம் உலகப்போர் ஆபத்து

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையை மீறி ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கினால் மூன்றாவது உலகப் போர் தொடங்கவும், உலகெங்கும் பெட்ரோல் போன்ற எரிபொருள் கிடைப்பதற்கு சிக்கலும் உருவாகும் என்று தெரியவந்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் காரணமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருசேர குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.  இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் […]

அ.தி.மு.க. தினகரன் கைக்கு வருகிறதா..? அண்ணாமலை பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி, பன்னீர் ஆவேசம்

தேனி தொகுதியில் தினகரனுக்கு அண்ணாமலை செய்த பிரசாரம் கடும் பின்விளைவு கொடுத்துள்ளது. தேனியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்காகப் பேசிய அண்ணாமலை, ‘ஏற்கனவே தேனி பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகள் மூலம் பெரிதும் பயனடைந்த தேனி பொதுமக்கள், மீண்டும் அண்ணன் அவர்களையே பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். தமிழகத்தில் வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் மக்களின் […]

செல்வச்சீமான் கார்த்தி சிதம்பரம் கரை சேர்வாரா..? சிவகங்கை தேர்தல் ரிப்போர்ட்

கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக போடக்கூடாது என்று கே.ஆர்.ராமசாமி, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். மீண்டும் செவச்சீமான் கார்த்தி சிதம்பரமே நிற்கிறார். அ.தி.மு.க.வின் சார்பில் நிற்கும் சேவியர் தாஸ் தேர்தல் அரசியலுக்கு ரொம்பவே புதுசு. அவருக்கு ஜாதி வாக்குகளும் இரட்டை இலையும் மட்டுமே சாதகம். தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் தேவநாதன் யாதவ். இந்த நேரத்தில் இவர் மீது திடீரென எழுந்திருக்கும் இந்து சிட்பண்ட் மோசடி குற்றச்சாட்டு கடுமையான […]

அண்ணாமலையின் 100 தேர்தல் வாக்குறுதி… மச்சானுக்கு சேம்பர் நிறுவனம்… பா.ம.க.வுக்கு ஆப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கான 100 தேர்தல் வாக்குறுதிகளை அண்ணாமலை வெளியிட்டார். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படும். கோவை மெட்ரோ திட்டம் விரைவுபடுத்தப்படும். தமிழகத்தின் இரண்டாவது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM), கோவையில் நிறுவப்படும். விவசாய மக்களின் சுமார் எழுபதாண்டு கால கோரிக்கையான, ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். […]

அண்ணன் ஸ்டாலினுக்கு தம்பி ராகுல் ஸ்வீட்… பாசக்கார கூட்டணி

கூட்டணித் தலைவர்கள் கட்டிபிடிப்பதும் கையை உயர்த்துவதும் சகஜமாக நடப்பது தான். ஆனால், கோவையில் ராகுல் செய்த காரியம் தமிழகம் முழுவதும் வைரலாக மாறியிருக்கிறது. கோவை செட்டிபாளையத்தில் இண்டியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி (கரூர்) ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுவதற்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராகுல் காந்தி வழியில் […]