News

Follow Us

தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களில் தேர்தல் முடிவுக்கு வரும் நிலையில், பா.ஜ.க. தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

புதுடெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த நாடும் இந்த ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயர் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தியிருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இங்கே.

·       70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். திருநங்கைகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

·       3 கோடி பேருக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படும்.

·       இலவச உணவு தாணியம் மேலும் ஐந்து ஆண்டுகள் வழங்கப்படும்.

·       பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

·       முத்ரா கடன் உதவ் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும்.

·       1 ரூபாய்க்கு பெண்களுக்கு நாப்கின் வழங்கப்படும்.

·       குறைந்த விலையில் பைப் மூலம் காஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

·       புல்லட் ரயில் திட்டம் கொண்டுவரப்படும்.

·       மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டம் கொண்டுவரப்படும்.

·       ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்.

·       திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link