News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இளையராஜாவின் ஆணவத்துக்கு வைரமுத்து நேரடி பதில்

தான் இசையமைத்த அத்தனை பாடலும் எனக்கே சொந்தம் என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் இளையராஜா. நான் எல்லோருக்கும் மேலானவன் என்றும் வாதம் வைத்திருக்கிறார். இது, இளையராஜாவின் ரசிகர்களையும் நெளிய வைத்திருக்கிறது. ஏனென்றால் சினிமா என்பது பணம் போட்ட தயரிப்பாளரின் சொத்து. அவர் அதை யாருக்கும் விற்கவோ குத்தகைக்கு விடவோ உரிமை உண்டு. அந்த சினிமாவைற்கு, இசை, எழுத்து, காட்சி அமைப்பு, நடிப்பு, இன்னபிற செயல்களை செய்தவர் அனைவரும் ஊதியம் பெற்று உழைத்தவரே… அவர்கள் யாருக்கும் அதில் எந்த பாத்தியமும் […]

மோடி அரசுக்கு எடப்பாடி பழனிசாமி லைட்டா ஒரு விமர்சனம்

கூட்டணியில் இருந்து வெளியே வந்தபிறகும் மத்திய அரசு மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் வைப்பதே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியிருக்கிறது. மிக்ஜாம் புயலுக்குக் கேட்ட நிவாரணத் தொகையை மோடி அரசு வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ‘அவங்க எப்பவும் அப்படித்தான்’ என்பது போன்று விமர்சனத்தை முடித்துக்கொண்டார். சேலம் மாவட்டம், இடைப்பாடியில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து […]

பாட்டியையும் விட்டுவைக்காத ரேவண்ணா… கர்நாடகாவை நாறடிக்கும் பாலியல் வீடியோக்கள்

பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக நிற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்கள் கர்நாடகா முழுவதும் பரவி வரும் நிலையில், அங்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் போயிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனும், பாஜகவின் கூட்டாளியும், மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவருமான குமாரசாமியின் மருமகன் பிரஜ்வல் ரேவண்ணாவே இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். 24 வயஹாகும் ரேவண்ணா இப்போது […]

குஜராத்தில் போதை ஃபேக்டரி… அண்ணாமலை அசைன்மென்ட்..?

தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் நல்ல பெயர் கொடுத்துவந்த நேரத்தில் ஜாபர் சாதிக் போதைப் பொருளுடன் பிடிபட்டது பெரும் பரபரப்பைக் கொடுத்தது. போதை தி.மு.க. என்று பா.ஜ.க.வினர் கடுமையாக பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலைகளில் இருந்து ஏராளமான போதைப்பொருட்களும், அதனை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலும், […]

ஸ்டாலினுக்கு அஞ்சு நாள் லீவு… ஃபேமிலி டிரிப்

தேர்தல் முடிந்தவுடனே ஜாலி வெளிநாட்டுக்குப் பறக்கப் போகிறார் என்றும் மாலத்தீவுக்குப் போகிறார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் அவரது ஐந்து நாள் ஃபேமிலி டிரிப் தமிழ்நாட்டுக்குள்ளே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடிக்கு சூடேற்றுவதற்காக மாலத்தீவு பறக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க. சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக திங்களன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் […]

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா வாட்ஸ் ஆப்..? நீதிமன்றத்தில் ஆவேசம்

இன்று வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத மனிதர்களே இல்லை எனும் அளவுக்கு செல்போனில் முக்கிய அம்சமாக இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த வாட்ஸ் ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு அம்சமான என்கிரிப்ஷனை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்று வாட்ஸ் ஆப் (WhatsApp) நிறுவனம் டெல்லி உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது இந்த […]

நயினார் நாகேந்திரனுக்கு எக்கச்சக்க சிக்கல்… 4 கோடி ரூபாய் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி சங்கர் ஜிவால் உத்தரவு

தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் தொடர்பான வழக்கில் கொடுக்கப்பட்ட சம்மனுக்கு நயினார் நாகேந்திரன் டிமிக்கி கொடுத்துவருகிறார். இந்த நிலியில், தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 6ம் தேதி இரவு சென்ற ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவிற்கு கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஓட்டல் ஊழியர் சதீஷ் […]

விவிபாட் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மோடி குஷியோ குஷி

பா.ஜ.க. விவிபாட் இயந்திரத்தில் மோசடி செய்தே ஜெயித்துவருகிறது என்று தொடர் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு […]

மன்சூர் அலிகானுக்கு காங்கிரஸ் கட்சியில் என்ன பதவி..?  சத்தியமூர்த்தி பவனில் கடும் குழப்பம்

நடிகர் மன்சூர் அலிகான் எங்கே இருந்தாலும் அங்கே குழப்பமும் கலாட்டாவும் நிச்சயம் இருக்கும். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் கடந்த 2021ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து தன்னுடைய கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தைக்குச் சென்றார். ஆனால், தொகுதிப் பங்கீடு உடன்பாடு அடையவில்லை என்ற கோபமானார். இந்த நிலையில் […]

இத்தனை காலமா ஏமாத்தியிருக்கானுங்க… ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா ஆரோக்கிய பானம் இல்லையாம்.

உடல் நலமில்லாத யாரையாவது பார்க்கச் சென்றால் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், உயரம் குறைவாக இருக்கும் பிள்ளைகளுக்கு போர்ன்விட்டா வாங்கிக் கொடுப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. இந்த பானங்களில் அப்படிப்பட்ட ஆரோக்கிய சத்துக்கள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபுட் பார்மர்’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் அவரது தளத்தில், ‘போர்ன்விட்டா ஒரு ஆரோக்கிய பானமே அல்ல. அதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை அருந்தும் குழந்தைகளுக்கு மிகைபருமன் முதல் டைப் 2 […]