News

Follow Us

உடல் நலமில்லாத யாரையாவது பார்க்கச் சென்றால் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், உயரம் குறைவாக இருக்கும் பிள்ளைகளுக்கு போர்ன்விட்டா வாங்கிக் கொடுப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. இந்த பானங்களில் அப்படிப்பட்ட ஆரோக்கிய சத்துக்கள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபுட் பார்மர்’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் அவரது தளத்தில், ‘போர்ன்விட்டா ஒரு ஆரோக்கிய பானமே அல்ல. அதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை அருந்தும் குழந்தைகளுக்கு மிகைபருமன் முதல் டைப் 2 நீரிழிவு வரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பாகும்’ என்று எச்சரித்தார்.

இதனை கடுமையாக மறுத்த காட்பரீஸ் போர்ன்விட்டா, இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்தது. இதனையடுத்து, பொதுவெளியில் மன்னிப்பு கோருவதாக அறிவித்த ‘ஃபுட் ஃபார்மர்’ தனது வீடியோவை நீக்குவதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் உருவாக்கிய பொறி பெரு நெருப்பாக வளர்ந்தது. இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டது.

அதன் விளைவாக, போர்ன்விட்டாவை ஆரோக்கிய பானங்கள் என்ற வகையிலிருந்து நீக்குமாறு, இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, போர்ன்விட்டா அதிகாரபூர்வமான ஆரோக்கியபானம் என்ற அடையாளத்தை துறந்தது

இதே வரிசையில் ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற பானங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

இதையடுத்து இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட பானங்களும் அந்த அடையாளத்தை இழக்கிறது. இவை இனி, ஆரோக்கிய பானம் என்பதிலிருந்து ‘செயல்பாட்டு ஊட்டச்சத்து பானங்கள்’ என்ற வகைமைக்கு பெயர் மாறுகிறது. இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரித்தேஷ் திவாரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்துஸ்தான் யூனிலிவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, ’செயல்பாட்டு ஊட்டச்சத்து பானங்கள்’ என்பது, புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை பூர்த்தி செய்கிறது. ஒரு தாவரம், விலங்கு, கடல் அல்லது நுண்ணுயிர் மூலத்திலிருந்து, ஏதேனும் உயிர்ச் செயலில் உள்ள கூறுகளைச் சேர்ப்பதன் மூலம் கூடுதல் ஆரோக்கிய பலன்களை வழங்கும் மது அல்லாத பானமாக இந்த ’செயல்பாட்டு ஊட்டச்சத்து பானங்களை’ வரையறுக்கலாம்.

சாதாரண உணவுப் பொருளை ஆரோக்கிய பானம் என்று இத்தனை ஆண்டுகளும் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link