News

Follow Us

இன்று வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத மனிதர்களே இல்லை எனும் அளவுக்கு செல்போனில் முக்கிய அம்சமாக இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த

வாட்ஸ் ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு அம்சமான என்கிரிப்ஷனை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்று வாட்ஸ் ஆப் (WhatsApp) நிறுவனம் டெல்லி உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது இந்த வாட்ஸ் ஆப் செயலியை விரைவான தகவல் பரிமாற்றத்திற்காகப் பலரும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் இதில் அனைத்து முக்கிய சேவைகளும் கிடைக்கும். மேலும் வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களின் தகவல்களைப் பத்திரமாக வைத்துக் கொள்வதற்காக 512 பிட் என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு அம்சத்தைப் பயன்படுத்துகிறது. அதாவது இது நீங்கள் அனுப்பும் தகவலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் 512,0 மற்றும் 1 எனப் பிரித்துச் சேமித்து வகைப்படும்.

எனவே இதனால் அதனை மீண்டும் ஒருங்கிணைத்து அந்த செய்தியைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். மேலும் இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் இந்திய அரசு மாற்றத்தைக் கொண்டு வந்தது. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் இந்த சட்டத்தை மீறுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதனை எதிர்த்து இந்நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தான் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வாட்ஸ்  ஆப் என்கிரிப்ஷன் காரணமாகப் போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது. இதுபோன்ற போலி செய்திகள் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையைக் குலைத்து விட கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

உடனே இதற்கு வாட்ஸ் ஆப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா கடும் கண்டனம் தெரிவித்தார். உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் இல்லை என்று தெரிவித்த அவர், இந்த சட்டம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை உள்ளிட்டவற்றை மீறுகிறது. மேலும் இதுபோன்ற சட்டங்களால் லட்சக்கணக்கான செய்திகளைப் பல ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்க வேண்டிய நிலை உருவாகும். இது போன்ற சட்டம் கொண்டுவரப்பட்டால் இந்தியாவில் இருந்து வாட்ஸ் ஆப் வெளியேற வேண்டி இருக்கும்’ என்று தேஜஸ் காரியா தெரிவித்தார்.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்தி வைத்தனர். அதேநேரம், வாட்ஸ் ஆப் இல்லையென்றால் எப்படி செயல்படுவது என்று இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link