News

Follow Us

நல்ல கூட்டணி யாருமே இல்லையா..?

2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சியினரும், ‘கள்ளக் கூட்டணி’ என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் பிரதமர் மோடி மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு கூட எடப்பாடி பழனிசாமி பேசவே இல்லை. ஆகவே, அவர்களுக்குள் கள்ளக்கூட்டணி இருக்கிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமியோ, ‘எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் கோ பேக் மோடி சொன்ன ஸ்டாலின் இப்போது கமான் கமான் என்று கூப்பிடுகிறார். டெல்லியில் போய் பவ்யமாக நிற்கிறார். எனவே அவர்களுக்குள் கள்ளக் கூட்டணி இருக்கிறது’ என்கிறார்கள்.

இவர்களுடைய பஞ்சாயத்து போதாது என்று சீமானுக்கும் பா.ஜ.க.வுக்கும் கள்ளக் கூட்டணி இருக்கிறது என்றும் சீமானுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கள்ளக் கூட்டணி இருக்கிறது என்றும் சுற்றி வளைத்துப் பேசி வருகிறார்கள்.

இப்படி ஆளாளுக்கு கள்ளக் கூட்டணி பற்றியே பேசிக்கொண்டு இருந்தால், நல்ல கூட்டணி யாருமே இல்லையாப்பா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link