ப்ளீஸ் மோடிஜி நேருவை விட்டுருங்க…

பிரதமர் மோடியின் உரை என்றால் அதில் கண்டிப்பாக சில விஷயங்கள் இடம் பெறும். முதல் விஷயம், இந்தியா விரைவில் வல்லரசாக மாறப்போகிறது என்பார். அதற்கு அடுத்தபடியாக இத்தனை காலமும் இந்தியா அடைந்த அத்தனை தோல்விகளுக்கும் காரணம் காங்கிரஸ் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு என்று குற்றம்சாட்டுவார். இப்படியே 10 ஆண்டுகளை ஓட்டிவிட்டார். மூன்றாவது தேர்தலை சந்திக்க இருக்கும் நேரத்திலும், 2080ல் இந்தியா வல்லரசு ஆகப்போகிறது, நேருவே அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்று மீண்டும் குற்றம் சாட்டி பேசிவருகிறார். […]
கப்பு முக்கியம் விஜய்…

சினிமாவில் அந்தரத்தில் பல்டியடித்து, ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் செய்து எதிரிகளை பந்தாடுவதில் நடிகர் விஜய் கில்லாடி. அதே பாணியில் அரசியலிலும் எடுத்தவுடன் நேரடியாக முதல்வர் போட்டியில் களம் இறங்குவதற்கு தமிழக வெற்றி கழகம் தொடங்கிவிட்டார். இதோ வரப்போறேன்… அதோ வரப்போறேன் என்றெல்லாம் பாச்சா காட்டிவந்த பாட்ஷா ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைவதற்கு முடிவு எடுத்து, அதே வேகத்தில் சுதாரித்து எழுந்துவிட்டார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்ற தைரியத்தில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், அடுத்தடுத்த […]
400 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ.க. வகுத்துள்ள புது வியூகம்!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது பாஜக. அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில பாஜக தலைவர்களிடம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். தொடர்ந்து இந்தியா கூட்டணி பலமிழந்து வருவது பாஜகவுக்கு […]
சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லீங்க… சமாளிக்கிறார் ரஜினி

லால் சலாம் மேடையில் ஐஸ்வர்யா, ‘என்னுடைய தந்தை ரஜினியை சங்கி என்று நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையில் என்னுடைய தந்தை அப்படிப்பட்டவர் இல்லை’ என்று வருத்தப்பட்டார். இதையடுத்து சங்கி என்பது கெட்டவார்த்தை என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்று சமூகவலைதளத்தில் பலத்த சலசலப்பு உண்டானது. இதற்கு விளக்கம் தெரிவித்த ரஜினி, ‘சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. கெட்ட வார்த்தை என்ற அர்த்தத்தில் ஐஸ்வர்யா சொல்லவில்லை’ என்று தெரிவித்தார். ஆனாலும், சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லீங்க, […]
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயுதமாக பயன்படுத்தப்படும் அயோத்தி ராமர் கோவில்

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற போதிலும் தற்போது நடந்து வரும் அனைத்து நிகழ்வுகளும் இந்த கோட்பாட்டினை கேள்விக்குறியாக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ராமர் கோவில் பல்வேறு சர்ச்சைகளையும் கேள்விகளையும் கிளப்பியுள்ளது. மேலும் ராமர் கோவில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு ஒரு பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராம பக்தர்கள் அயோத்திக்கு படையெடுத்து […]
சர்ச்சைக்கு அஸ்திவாரமிட்ட அயோத்தி ராமர் கோவில்!

அயோத்தி ராமர் கோவில் மிகவும் பிரமாண்டமா முறையில் கட்டி முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சினிமாதுறையினர் மற்றும் விளையாட்டுத் துறை ஜாம்பவான்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இது ஒரு புறம் இருக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அயோத்தி ராமர் கோவில் திறப்பு குறித்து பல்வேறு கேள்விகளையும் அதிருப்திகளையும் வெளியிட்டு வருகிறது. மேலும் தங்களை புறக்கணித்துவிட்டதாகவும் பேச்சுகள் எழுந்தன. மதசார்பற்ற இந்தியாவிற்கு பா.ஜ.க. மதசாயம் பூசுவதாக பல்வேறு […]
திருவள்ளுவரை கூட விட்டுவைக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி!

காவி வேட்டி அணிந்த திருவள்ளுவர் படம் குறித்த விவகாரத்தால் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. தமிழ்நாடு என்ற பெயரை தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உலகப்பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை காவி உடை அணிந்த வகையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பொதுவாக திருவள்ளுவர் தமிழக அரசு பாடநூல்களிலும், […]
காவி அணிந்த திருவள்ளுவர்: தமிழக ஆளுநரின் திட்டம்தான் என்ன?

திருவள்ளுவருக்கு காவி பூசி மத அடையாளம் கொடுத்தது தொடர்பாக திமுக அரசு தொடர்ந்து தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறது. திராவிட மாடல் என்ற பெயரில் திமுக அரசு இயங்கி வருகிறது. இதற்கிடையில் சனாதன பேச்சு குறித்த விவகாரமும் ஓய்ந்தபாடில்லை. இருப்பினும் என் மீது சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்திப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் இடங்களில் எல்லாம் சனாதனம் குறித்த தனது நிலைப்பாட்டை […]
ட்ரோலுக்கு ஆளான கலைஞர் 100 விழா!

மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் புகழை கவுரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலைஞர் 100 விழா தற்போது நெட்டீசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக திரைத்துறை சார்பில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் ‘கலைஞர் 100’ விழா சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அனைத்து திரையுலக ஜாம்பவான்களுக்கும், நடிகர், நடிகைகள், தயாரிபபாளர்கள், இயக்குனர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நயன்தாரா, […]
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற காய் நகர்த்தும் பா.ஜ.க.!

இந்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தொடர்ந்து இந்தியா கூட்டணி குறித்தும் அதன் உறுப்பினர்கள் குறித்தும் பல்வேறு எதிர்மறை கருத்துகளை பதிவு செய்து வருகிறது. பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால ஆட்சி இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் […]

