News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் புகழை கவுரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலைஞர் 100 விழா தற்போது நெட்டீசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

 

தமிழக திரைத்துறை சார்பில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் ‘கலைஞர் 100’ விழா சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அனைத்து திரையுலக ஜாம்பவான்களுக்கும், நடிகர், நடிகைகள், தயாரிபபாளர்கள், இயக்குனர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் விஜய் மற்றும் அஜித் வரவில்லை. இதன் காரணமாகவே இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டதாகவும், பொங்கல் பண்டிகையை குறிவைத்தே இந்நிகழ்ச்சி முன்கூட்டியே நடத்தப்பட்டதாகவும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் 100 விழாவுக்காக செய்யப்பட்ட விளம்பரங்களும், விழா ஏற்பாடுகளும் வீண் என்ற வகையிலும் நெட்டீசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link