News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சென்னையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி! 10,000 போலீசார் குவிப்பு!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகம் முழுவதிலும் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் களைகட்டி வரும் விநாயகர் சதுர்த்தி தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 4 ஆயிரம் இடங்களில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் […]

மழை நீர் தேங்கிய குழியில் விழுந்த சிறுவன் பலி! தாம்பரத்தில் சோகம்!

மழை நீர் தேங்கியிருந்த குழியில் தவறி விழுந்த 11வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையை அடுத்த தாம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தாம்பரம் சானிடோரியம் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற 11 வயது சிறுவன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.   இந்நிலையில் சிறுவன் விஷ்வா தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்றார். அப்பகுதி தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ரெயில்வே இடமாகும். கடந்த சில நாட்களாக […]

மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சென்னை மாநகராட்சி ஆணையர்! என்ன சொன்னார் தெரியுமா?

சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதோடு சளி, காய்ச்சல்  காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசும் போது, ‘‘சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு 3 நாட்களில் புழுக்களாக மாறி, […]

5 விருதுகளை தட்டிச் சென்ற விக்ரம் திரைப்படம்! சைமா விருதுகள் 2023

துபாயில் நடைபெற்ற சைமா 2023 விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படத்துறை சார்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.ஃ     கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் சைமா விருதுகள் திரையுலகத்தினரின் பெரிய கனவு என்றே சொல வேண்டும். கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழா  இந்த ஆண்டு துபாயில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.   […]

ஏ.வி.எம். அருங்காட்சியகத்தை அலங்கரித்த அஜித் பைக்!

ஏ.வி.எம். அருங்காட்சியகத்தில் நடிகர் அஜித் திருப்பதி திரைப்படத்தில் பயன்படுத்திய பைக்கை இருப்பது கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள்.   தமிழ் சினிமாவுக்கு முகவரி என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு சாதனைகளை புரிந்த ஏ.வி.எம்.நிறுவனம் தொடங்கப்பட்ட 1945ம் ஆண்டு முதல் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா உள்ளிட்ட 5 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.   தமிழ் மொழி மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என கடந்த 77 வருடங்களில் 178 திரைப்படங்களை தயாரித்துள்ளது. இருப்பினும் ஏ.வி.எம். […]

திடீரென்று ரத்தான ‘இந்தியா கூட்டணி’யின் முதல் பொதுக்கூட்டம்! பின்னணி இதுதான்!

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.   கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 எதிர்க்கட்சியினர் ஒன்றாக இணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டனர். இந்தியா கூட்டணி என்ற பெயருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் இக்கூட்டணியினர் தொடர்ந்து தங்கள் கட்சிப்பணிகளை செய்து வருகின்றனர்.   இதுவரை இந்தியா […]

இணையத்தை கலக்கும் ‘லியோ’ விநாயகர்! ரசிகர்கள் உற்சாகம்!

சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் தற்போது நடிகர் விஜய்யின் ‘லியோ’ உருவத்தில் விநாயகர் சிலைகள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   நாளை மறுநாள் (18ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வெவ்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பெரியளவு முதல் சாதாரண அளவு வரையிலான பிள்ளையார் சிலைகளை ஆர்வமுடன் பக்தர்கள் கவனிப்பது வழக்கம். அந்தவகையில் புஷ்பா, பாகுபலி என சினிமா கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது.   […]

களை கட்டிய திருமலை திருக்குடை ஊர்வலம்! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தற்போது திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் களை கட்டியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   திருப்பதி பிரம்மோற்சவம் வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.     வருகிற 22ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவையின் போது வழக்கத்திற்கு அதிகமாக […]

அடுத்த 3 மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்றாலும், மக்கள் அடுத்த 3 மாதங்களுக்கும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   தமிழகத்தின் அண்டை மாநிலமான நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வதந்திகள் இணையத்தில் உலா வந்தன.   இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியின் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன் பொது மக்களுக்கு எச்சரிக்கை […]

சென்னை ‘எக்ஸ்பிரஸ் அவென்யு’வில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யுவில் இன்றும், நாளையும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் அதை காண கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் நிலையில், தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள உலகக்கோப்பை தற்போது பல்வேறு நாடுகளில் தனது […]