News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

மழை நீர் தேங்கியிருந்த குழியில் தவறி விழுந்த 11வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையை அடுத்த தாம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தாம்பரம் சானிடோரியம் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற 11 வயது சிறுவன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் சிறுவன் விஷ்வா தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்றார். அப்பகுதி தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ரெயில்வே இடமாகும். கடந்த சில நாட்களாக அடிக்கடி கனமழை பெய்வதால் அப்பகுதியில் இருந்த குழியில் மழைநீர் அதிகளவு தேங்கியிருந்துள்ளது.

 

நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த போது மழைநீர் தேங்கியிருந்த குழியில்  விஷ்வா தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிட்லபாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பள்ளி மாணவன் மழைநீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link